Home
Mobile

வெறும் ரூ.7,499 போதும்.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. இன்று வருகிறது போக்கோ போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் கடந்த வாரம் போக்கோ சி65 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய போக்கோ சி65 ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் போக்கோ சி65 போனை வாங்க முடியும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி65 போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.9,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.10,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.

வெறும் ரூ.7,499 போதும்.. இன்று வருகிறது போக்கோ போன்.. எந்த மாடல்?

எனவே ரூ.7,499 இருந்தால் போது இந்த புதிய போக்கோ சி65 ஸ்மார்ட்போனை இன்று வாங்கிவிட முடியும். மேலும் மேட் பிளாக் மற்றும் பேஸ்டல் ப்ளூ நிறங்களில் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ சி65 அம்சங்கள் (POCO C65 Specification): மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாலி ஜி52 எம்சி2 ஜிபியு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

வெறும் ரூ.7,499 போதும்.. இன்று வருகிறது போக்கோ போன்.. எந்த மாடல்?

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. இதுதவிர சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் ஃபேஸ் அன்லாக்(Face unlock) வசதி இந்த போனில் உள்ளன.

இந்த போக்கோ சி65 ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. பின்பு 1650 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

வெறும் ரூ.7,499 போதும்.. இன்று வருகிறது போக்கோ போன்.. எந்த மாடல்?

50எம்பி மெயின் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி65 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது போக்கோ சி65 ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் போக்கோ சி65 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. கம்மி விலையில் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த போனை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C65 goes on sale today for the first time on Flipkart: check Price in India, Launch Offers, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X