Home
Mobile

போட்டி போட்டு வாங்க போறாங்க.. பட்ஜெட் விலை.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த போன்?

போக்கோ நிறுவனம் தனது போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

போட்டி போட்டு வாங்க போறாங்க.. 256ஜிபி மெமரி.. எந்த போன்?

போக்கோ சி65 5ஜி அம்சங்கள் (POCO C65 5G specifications): 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் இந்த போக்கோ சி65 5ஜி போன. பின்பு 1,600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

எனேவ இந்த போக்கோ ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் பிளாக், பர்பிள், ப்ளூ நிறங்களில் இந்த போக்கோ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி போட்டு வாங்க போறாங்க.. 256ஜிபி மெமரி.. எந்த போன்?

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

5ஜி, 4ஜி எல்டிஇ,வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்தியாவில் போக்கோ சி65 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C65 5G will be launched in India on December 15: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X