Home
Mobile

வெளுத்து கட்டும் விற்பனை.. வெறும் ரூ.6999 போதும்.. 12GB ரேம்.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மே 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் போக்கோ மே விற்பனை 2024 (POCO May Sale 2024) நடக்கிறது. இந்த விற்பனையில் பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கும்படி போக்கோ சி61 (POCO C61) கிடைக்காத பட்ஜெட்டில் வந்துள்ளது.

போக்கோ சி61 அம்சங்கள் (POCO C61 Specifications): இந்த போனில் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி ஹீலியோ ஜி36 12எம்எம் (Octa-Core MediaTek Helio G36 12nm) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஈ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) சிப்செட் வருகிறது.

வெளுத்து கட்டும் விற்பனை.. வெறும் ரூ.6999 போதும்.. 12GB ரேம் மாடல்!

இருப்பினும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருவதால், யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மிட்-பிரீமியமாக எதிர்பார்க்கலாம். ஆனால், கேமிங் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக எதிர்பார்க்க முடியாது. 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

ஏஐ லென்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 1080P வீடியோ ரெக்கார்டிங், ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), டெப்த் கன்ட்ரோல் (Depth Control), எச்டிஆர் (HDR), வீடியோ ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters) போன்ற கேமரா பீச்சர்களை கொண்டிருக்கிறது.

அதேபோல 1080P வீடியோ ரெக்கார்டிங், ஏஐ பியூட்டிபை (AI Beautify), பல்ம் ஷட்டர் (Palm Shutter), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) போன்ற பீச்சர்களுடன் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, ரூ.7000 பட்ஜெட்டிலும் பக்கா கேமரா பீச்சர்களை பேக் செய்துள்ளது. 6.71 இன்ச் (1650 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது.

வெளுத்து கட்டும் விற்பனை.. வெறும் ரூ.6999 போதும்.. 12GB ரேம் மாடல்!

இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொண்டிருக்கிறது. மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side mounted Fingerprint Scanner) மற்றும் பாட்டம் ஸ்பீக்கர்கள் வருகின்றன.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. அதோடு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் கொண்டிருக்கிறது.

எதர்னல் ப்ளூ (Ethereal Blue), டயமன்ட் டஸ்ட் பிளாக் (Diaomond Dust Black) மற்றும் மிஸ்டிகல் கிரீன் (Mystical Green) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போக்கோவின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,499ஆகவும் இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் போக்கோ மே விற்பனையை முன்னிட்டு 4 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும், 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆகவே, 4 ஜிபி மாடலை ரூ.6,499 பட்ஜெட்டிலும், 6 ஜிபி மாடலை ரூ.6,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO C61 With 12GB RAM Under Rs 7000 in Flipakrt May Sale From May 1 To May 10 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X