Home
Mobile

ஆர்டர் பொளக்குமே! வெறும் ரூ.7000-க்கு.. பக்காவா ஒரு புது POCO போன்.. 12GB ரேம், 5000mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே

போக்கோ (POCO) நிறுவனமானது ரூ.7000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. 12ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி, 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த போக்கோ போனின் மாடல் பெயர் என்ன? விலை என்ன? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? போக்கோ நிறுவனமானது இந்தியா மற்றும் பிற சந்தைகளில் போக்கோ சி61 என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் எஸ்ஐஜி மற்றும் பிஐஎஸ் ஆகிய 2 சான்றிதழ் தளங்களையும் கடந்துள்ளதால், இது உடனடி வெளியீட்டை காணும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஆர்டர் பொளக்குமே! வெறும் ரூ.7000-க்கு.. பக்காவா ஒரு புது POCO போன்!

பெரும்பாலும் இது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமான ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ரெட்மி ஏ3-ல் உள்ள அதே அம்சங்கள் போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ சி61 ஆக கிடைக்கும்.

போக்கோ சி61 என்ன விலைக்கு வரும்? இது ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் பட்சத்தில் இதுவும் ரூ.7000 பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும். நினைவூட்டும் வண்ணம் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 வகையான ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆர்டர் பொளக்குமே! வெறும் ரூ.7000-க்கு.. பக்காவா ஒரு புது POCO போன்!

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299 க்கு வாங்க கிடைக்கும்; 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,299 க்கும் மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,299 க்கும் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஆர்டர் பொளக்குமே! வெறும் ரூ.7000-க்கு.. பக்காவா ஒரு புது POCO போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 @ 680மெகாஹெர்ட்ஸ் ஜிபியு உடனான 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12 என்எம் சிப்செட் (Octa-Core MediaTek Helio G36 12nm chipset) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.

மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் வரும் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது, அதில் எல்இடி பிளாஷ் உடனான 8எம்பி (எப்/2.0 அபெர்க்ஷர்) மெயின் கேமரா + செகண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

மேலும் 3.5மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூரவ வலைத்தளமான எம்ஐ.காம் (Mi.com), அதிகாரப்பூர்வ ஸ்டோர் ஆன எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் (Mi Home Stores) மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C61 to launch soon in India under Rs 8000 budget could be rebranded version of Redmi A3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X