மிரளவிட்டாப்ல.. வெறும் ரூ.5999 போதும்.. 1TB மெமரி.. 8GB ரேம்.. 10W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட் அதிரும் பட்ஜெட்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம், 1 டிபி மெமரி, 8 ஜிபி ரேம், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாம், பிரீமியம் டிசைனில் வெளியாகி பட்டையை கிளப்பிய போக்கோ சி61 (POCO C61) போனின் ஏர்டெல் லாக்டு மாடல் மேலும் மலிவான விலைக்கு களமிறங்கி இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள், விலை, விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
இந்த போக்கோ சி61 போனை வாங்கும் கஸ்டமர்கள் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரூ 199 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த 18 மாதங்களுக்கு பிறகு வேறு சிம் கார்டுகளுக்கு மாறி கொள்ளலாம். இதனிடையே 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த ஏர்டெல் லாக்டு மாடலில் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் விலை ரூ.5,999ஆக இருக்கிறது. வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
போக்கோ சி61 அம்சங்கள் (POCO C61 Specifications): இந்த போக்கோவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட 6.71 இன்ச் (1650 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஈ8320 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி ஹீலியோ ஜி36 12எம்எம் (Octa-Core MediaTek Helio G36 12nm) சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த போக்கோவில் 8 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

1080P வீடியோ ரெக்கார்டிங், ஏஐ போர்ட்ராய்டு மோட் சப்போர்ட் உள்ளது. ஏஐ பியூட்டி, பல்ம் ஷட்டர், வாய்ஸ் ஷட்டர் போன்ற பீச்சர்கள் வருகின்றன. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளது.
இந்த போக்கோ சி61 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. மேலும், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.
இந்த போனின் கனெக்விட்டியை பார்க்கையில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) வருகின்றன. எதர்னல் ப்ளூ (Ethereal Blue), டயமன்ட் டஸ்ட் பிளாக் (Diaomond Dust Black) மற்றும் மிஸ்டிகல் கிரீன் (Mystical Green) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








