Home
Mobile

மலிவு விலையில் அட்டகாசமான போனை இறக்கிவிடும் POCO: அறிமுக தேதி இதுதான்.!

போக்கோ நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் போக்கோ சி50, போக்கோ சி55 ஆகிய போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் போக்கோ சி51 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். குறிப்பாக இந்த புதிய போக்போ மலிவு விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வரும் ஏப்ரல் 7-ம் தேதி இந்தியாவில் போக்கோ சி51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகப் போக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மலிவு விலையில் அட்டகாசமான போனை இறக்கிவிடும் POCO: அறிமுக தேதி இதுதான்!

போக்கோ சி51 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். மேலும் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்படும். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12என்எம் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி51 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த பிராசஸர் வசதியைப் போன்றே பேட்டரி வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

அதாவது போக்கோ சி51 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

மலிவு விலையில் அட்டகாசமான போனை இறக்கிவிடும் POCO: அறிமுக தேதி இதுதான்!

புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போனில் 8எம்பி டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். ஆனால் இந்த போனில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ சி51 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ சி51 ஸ்மார்ட்போன்.

மலிவு விலையில் அட்டகாசமான போனை இறக்கிவிடும் POCO: அறிமுக தேதி இதுதான்!

போக்கோ சி51 ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த புதிய போன் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த புதிய போக்கோ போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Poco C51 smartphone will be launched in India on April 7 at a low price: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X