Home
Mobile

ரூ.6000 விலையில் 4ஜி போன்.. 5 மாதங்களுக்கான டேட்டா ப்ரீ.. 5000mAh பேட்டரி, 7ஜிபி ரேம் வேற.. எந்த மாடல்?

போக்கோ (Airtel) நிறுவனமும், ஏர்டெல் (Airtel) நிறுவனமும் இணைந்து வெறும் ரூ.6000 பட்ஜெட்டில் 5 மாதங்களுக்கான டேட்டா பிளான்களுடன் கூடிய போக்கோ சி51 (POCO C51) போனை விற்பனைக்கு களமிறக்கியிருக்கிறது. இந்த போன் 5000mAh பேட்டரி, 7 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

இவ்வளவு மலிவான விலையில் 4ஜி போன் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். சொல்லப்போனால், இந்த போன் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 8,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, அதே விலை நீடிக்கும் வேளையில், ஏர்டெல் நிறுவனம் போக்கோ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து ஆஃபர் விலையில் விற்பனைக்கு களமிறக்குகிறது.

ரூ.6000 விலையில் 4ஜி போன்.. 5 மாதங்களுக்கான டேட்டா ப்ரீ.. எந்த மாடல்?

போக்கோ சி 51 அம்சங்கள் (POCO C51 Specifications): இந்த போக்கோ போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 எஸ்ஓசி (Octa-Core MediaTek Helio G36 SoC) சிப்செட் வருகிறது.

8 எம்பி மெயின் கேமரா + 08 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. மொத்தமாக 7 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரியர் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Rear Fingerprint Sensor), 3 எம்எம் ஹெட்போன் ஜேக், 5.0 ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 2.4GHz வைபை போன்ற அம்சங்களும் வருகின்றன. இந்த போன் பவர் பிளாக் (Power Black) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் விலை ரூ.8,499ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிரத்யேக சலுகையாக பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஜூலை 18 முதல் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த போனை வாங்கினால், ஏர்டெல் நிறுவனத்தின் பிரத்யேக சலுகைகளையும் கிடைக்கும். இந்த போனில் ஏர்டெல் சிம் பயன்படுத்துவோருக்கு போனின் விலையில் 7.5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

அதோடு தொடர்ந்து 5 மாதங்களுக்கு 10 ஜிபி டேட்டா வவுச்சர்கள் கொடுக்கப்படும். மொத்தமாக 50 ஜிபி டேட்டாவை விலையில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்த போன் ஏர்டெல்-லாக் வேரியண்ட் மாடல் என்பதால் அதில் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சிம் கார்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த போனை வாங்கிய பின்பு, ஏர்டெல் சிம் கார்ட்டை சொருகி ரூ. 199 விலை கொண்ட ஏர்டெல் ட்ரூலி அன்லிமிடெட் (Airtel Truly Unlimited) ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு, உங்களால் ஆஃபர்களை பெற முடியும். இரண்டாவது சிம் போர்ட்டில் வேறு நிறுவனத்தின் சிம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco C51 Airtel Locked Variant Under Rs 6000 Phone Sale Starting July 18 on Flipkart Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X