இந்த புது போனை இப்போவே வாங்கினால் ரூ. 6200 தானா? தீயாய் விற்பனையாகுது உடனே வாங்குங்க.!
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளின் அறிமுக நாளில் பல தள்ளுபடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று அறிமுகமான போக்கோ சி50 (POCO C50) ஸ்மார்ட்போன் அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்று பகல் 12 மணி அளவில் Flipkart இணையதளத்தில் அறிமுகமான இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் அறிமுக விலை என்னவென்று தெரிந்தால் கட்டாயம் நீங்களும் ஒன்றை ஆர்டர் செய்து விடுவீர்கள்.

போக்கோ சி50 தான் Redmi-யின் A1+ சாதனமா? பார்க்க ஒரே மாதிரி இருக்கே.!
மீடியா டெக் ஹீலியோ ஏ22 ப்ராசசர் (MediaTek Helio A22 Processor) மற்றும் 3 GB வரை RAM வசதி கொண்ட இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ரெட்மியின் (Redmi) மற்றொரு வடிவமாகும்.
Redmi-யின் A1+ ஸ்மார்ட் போனை ரீ-ப்ராண்ட் (Rebrand) செய்து POCO நிறுவனம் போக்கோ சி சீரிசை (POCO C Series) சென்ற ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது.
அந்த சீரியஸில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான போக்கோ சி50 சென்ற வாரம் இந்திய சந்தையில் தனது அறிமுக விலையை அறிவித்தது.

மலிவு விலைக்கு இத்தனை அம்சங்களுடன் ஒரு போனா?
இவ்வளவு மலிவான விலைக்கு இத்தனை அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன் கிடைப்பது கடினம் என்றே சொல்லலாம்.
இந்த ஸ்மார்ட் போன் பெரிய HD+ டிஸ்ப்ளே, 5,000 mAh பேட்டரி, 8 MP கேமரா, பின்பக்க கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 12 GO தளத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் இந்திய சந்தையில் அதன் விலை என்ன பற்றிய தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குறைந்த விலையில் சூப்பர் தரமான டிஸ்பிளே.!
32 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் (Internal Storage) உடன் அறிமுகம் ஆகியுள்ள போக்கோ சி50 ஸ்மார்ட் போன் 2 GB மற்றும் 3 GB RAM என்று இரண்டு வேரியண்டுகளாக இந்தியாவில் நேற்று அறிமுகமாகியுள்ளது.
6.52 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே (IPS LCD Display), 269 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டி (269ppi Pixel density), 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 400 நீட்ஸ் ஒளிர்வு திறன் (400 nits Brightness) ஆகிய அம்சங்கள் கொண்ட HD+ திரையுடன் இந்த போக்கோ சி50 ஸ்மார்ட் போன் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பக்கம் உள்ள செல்ஃபி கேமரா வாட்டர் டிராப் நாட்ச் (Waterdrop notch) கொண்டு பொருத்தப்பட்டுள்ளது.

டீசெண்டான ஸ்பெக்ஸ் உடன் சக்தி வாய்ந்த சிப்செட்
மேலும் இந்தத் திரை 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவுடன் (Contrast Ratio) வருகிறது.
ஆண்ட்ராய்டு 12 GO தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியா டெக் ஹீலியோ A22 பிராசசர் (Quadcore MediaTek Helio A22 Processor) கொண்டு செயல்படுகிறது.
மேலும், இதில் ஐஎம்ஜி பவர் விஆர் கிராபிக்ஸ் யூனிட்டும் (IMG PowerVR Graphics Unit ) உள்ளது.
இது 3 GB LPDDR4X RAM மற்றும் 32 GB இஎம்எம்சி (eMMC) சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி கார்டு (micro SD card) பயன்படுத்தி மேலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

மலிவு விலையில் 5000mAh பேட்டரியுடன் பாஸ்ட் சார்ஜிங்கா.! அடேங்கப்பா.!
மைக்ரோ எஸ்டி கார்டை பொருத்துவதற்கான பிரத்தியேக ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 8 MP பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார் (Depth sensor) கொண்டு வரும் இந்த போக்கோ சி50 ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால் பேசுவதற்கும் ஏதுவாக 5 MP முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 10W அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 5000mAh பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட் போன் இயங்குகிறது.
சார்ஜிங் செய்வதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வசதியாக மைக்ரோ யுஎஸ்பி போர்டும் (micro USB port) இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

நச்சென்று இரண்டு நிறங்களில் இப்போதே வாங்க கிடைக்கிறது.!
3.5 mm ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சிங்கிள் ஸ்பீக்கர் (Single speaker) கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் பின்பக்கம் கைரேகை ஸ்கேனரும் உள்ளது.
ராயல் ப்ளூ (Royal Blue) மற்றும் கண்ட்ரி கிரீன் (Country Green) என்று இரு நிறங்களில் அறிமுகமாகியுள்ள இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும்.
மிகவும் லைட் வெயிட்டாக (Light weight) அறிமுகம் செய்யப்பட்டுள்ள எந்த ஸ்மார்ட் போனில் டுவல் சிம் (Dual Sim), 4ஜி, 2.4 GHz Wi-Fi, ஜிபிஎஸ் (GPS), கிளோனஸ் (Glonass) மற்றும் பேய்டுவோ (BeiDuo) ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப விற்பனைக்கான ஷார்ட் டைம் சலுகை.!
இந்த இரண்டு வேரியண்டுகளில் 2 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 6499-க்கும் 3 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 7299-க்கும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பிரத்தியேகமாக Flipkart இணையதளத்தில் விற்பனையாகி வரும் இந்த ஸ்மார்ட் போன் அறிமுக விலையாக 2 GB RAM கொண்ட வேரியன்ட் ரூ. 6249-க்கும், 3 GB RAM கொண்ட வேரியண்ட் ரூ. 6999-க்கும், 300 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனையாகியுள்ளது.

இந்த போனிற்கு நிகரான மற்ற போட்டியாளர்கள் யார்?
Realme C30, டெக்னோ பாப் 6 ப்ரோ (Tecno Pop 6 Pro), ரெட்மி 6 (Redmi 6) ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களுக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ள இந்த போக்கோ சி50 ஸ்மார்ட்போன் மலிவான விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.
இது குறைந்த நாள் சலுகை மட்டுமே. இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க, சீக்கிரம் போய் உங்களுக்கான போக்கோ சி50 ஸ்மார்ட்போனை குறைந்த விலைக்கு ஆர்டர் செஞ்சு பணத்தை சேமியுங்கள்.


Click it and Unblock the Notifications








