Home
Mobile

ரூ.7,499-விலையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

மிகவும் எதிர்பார்த்த போக்கோ சி3 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சிறந்த கேமரா வசதியுடன் சற்று குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ சி3 ஸ்மார்ட்போன்

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 மிகவும் எதிர்பார்த்த

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் MIUI 12 வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி

இந்த போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி

போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம் பசுமை போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5, ஜிபிஎஸ்

டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5, ஜிபிஎஸ் +க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக 3ஜிபி ரேம் கொண்ட போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco C3 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X