போக்கோ C3 பட்ஜெட் விலையில் 13 எம்.பி ட்ரிபிள் கேமராவுடன் வெளிவருமா?

|

போக்கோ நிறுவனம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி போக்கோ C3 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று தெரியவந்துள்ளது. போக்கோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மூலம் 'கேம் சேஞ்சர்' என்ற டேக்லைன் மூலம் ஒரு டீஸரை வெளியிட்டுள்ளது. இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்சல் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உண்மையா?

13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உண்மையா?

பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போனுக்கு ஏற்கனவே ஒரு மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. போக்கோ C3 போனின் மேல் இடது மூலையில் ஒரு சதுர வடிவ கேமரா தொகுதி கொடுக்கப்பட்டுள்ளதை பிளிப்கார்ட் டீஸர் வெளிப்படுத்துகிறது. இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், எல்இடி ப்ளாஷ் மற்றும் 2 கூடுதல் சென்சார்களை கொண்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது. பின்புறத்தில் போக்கோ லோகோ எழுத்துக்களும் பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ C3

போக்கோ C3

சில நாட்களுக்கு முன்பு, போக்கோ C3 பற்றிய ஒரு கசிவு இணையத்தில் வெளியாகியது, இது போக்கோ C3 ஸ்மார்ட்போனின் பெட்டியைக் காட்டியது, அதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ .10,990 என்று சாதனத்தின் எம்ஆர்பியைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி போக்கோ C3 இன்னும் விலை குறைவாக கிடைக்குமென்று தெரிகிறது.

ஓடும் லாரியை துப்பாக்கியுடன் சேஸ் செய்து 10 கோடி மதிப்புடைய போன்கள் கொள்ளை! சிக்கியது எப்படி?ஓடும் லாரியை துப்பாக்கியுடன் சேஸ் செய்து 10 கோடி மதிப்புடைய போன்கள் கொள்ளை! சிக்கியது எப்படி?

ரெட்மி 9C - போக்கோ C3

ரெட்மி 9C - போக்கோ C3

இந்த லீக் தகவல் டெலிகிராமில் லீக்கர்பாபா வெளியிட்டார். இந்த சாதனம் மற்றொரு மறுபெயரிடப்பட்ட ரெட்மி தொலைப்பேசியாக இருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன, இந்த விஷயத்தில், ரெட்மி 9C ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளில் சிறிதளவு மாற்றத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வெளியாகும் போக்கோ C3 போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் பற்றிப் பார்க்கலாம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

போக்கோ C3, 720 × 1600 தீர்மானம் கொண்ட 6.53' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன் எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோவின் டீஸரில் காண்பிக்கப்பட்ட புதிய பாணி உருவத்தின் படி, இந்த சாதனம் மூன்று-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முக்கிய சென்சார் 13 எம்பி ஷூட்டராக 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சாராக இருக்க வாய்ப்புள்ளது. முன்பக்கத்தில், சாதனம் 5 எம்.பி கேமராவுடன் வருகிறது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

இந்த சாதனம் ஒரு கேமிங் பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்பதையும் போகோ உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 கேமிங் பிராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு இருக்க வேண்டும் என்றும், நார்சோ 20A ஒத்த 10W சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாதனம் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் விலை என்னவாக இருக்கும்?

பட்ஜெட் விலை என்னவாக இருக்கும்?

இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரையில், போக்கோ C3 ஸ்மார்ட்போன் 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜி எல்டிஇ, வைஃபை மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போக்கோ C3 ஸ்மார்ட்போன் வெறும் ரூ .8,499 என்ற பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Poco C3 confirmed to feature 13MP triple rear cameras : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X