Home
Mobile

அம்பானி VS மிட்டல்! ஆட்டம் சூடு பிடிச்சுருச்சு.. ரூ.8000-க்கு புது Jio 5G போன்.. பதறிப்போய் Airtel செய்த வேலை!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது இந்தியாவிலேயே மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை (Most Affordable 5G Phone) அறிமுகம் செய்யும் நோக்கத்தின்கீழ் சிப்செட் தயாரிப்பாளர் ஆன குவால்காம் (Qualcomm) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த கூட்டணியின் கீழ், ரூ.8000 பட்ஜெட்டில் ஜியோ எக்ஸ்1 5ஜி (Jio X1 5G) என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு போட்டியாக, சுனில் பார்தி மிட்டல் (Sunil Bharthi Mittal) தலைமையிலான ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஒரு வேலையை பார்த்துள்ளது; அதுவும் சீன மொபைல் கம்பெனி ஒன்றுடன் கூட்டுசேர்ந்துகொன்டு!

ரூ.8000-க்கு புது Jio 5G போன்.. பதறிப்போய் Airtel செய்த வேலை!

போக்கோ இந்தியாவின் தலைவர் ஆன ஹிமான்ஷு டாண்டன், பட்ஜெட் விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவலோடு சேர்த்து, இந்த புதிய 5ஜி போனை அறிமுகப்படுத்த ஏர்டெல் உடனான தனது கூட்டாண்மையை போக்கோ நீட்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

போக்கோ மற்றும் பார்தி ஏர்டெல் கூட்டணியில் உருவாகும் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் (Budget Price 5G Smartphone) ஆனது இந்தியாவிலேயே மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்காம் கூட்டணிக்கான நேரடி சவால் என்பதில் சந்தேகேம வேண்டாம்.

ரூ.8000-க்கு புது Jio 5G போன்.. பதறிப்போய் Airtel செய்த வேலை!

போக்கோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷன் (Airtel Version) ஆக இருக்க, அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பான கேள்விக்கு "உண்மை" என்று ஹிமான்ஷு டாண்டன் பதில் அளித்துள்ளார். அறியதோர்களுக்கு, ஏர்டெல் வெர்ஷன் என்றால் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில் ஏர்டெல் ப்ரீபெய்ட் கனெக்ஷன் மற்றும் ஏர்டெல் வழங்கும் பிரத்யேக பலன்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2023 ஜூலை மாதத்தில் போக்கோ சி51 ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷன் (POCO C51 Airtel Version) அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான போக்கோ சி51-ன் சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,499-க்கு அறிமுகமான மறுகையில், போக்கோ சி51 ஏர்டெல் வெர்ஷன் ரூ.5,999-க்கு அறிமுகமானது. இதில் ப்ரீபெய்ட் கனெக்ஷன் மற்றும் 50ஜிபி இலவச மொபைல் டேட்டா போன்ற சில பிரத்யேக நன்மைகள் சேர்க்கப்பட்டன.

ரூ.8000-க்கு புது Jio 5G போன்.. பதறிப்போய் Airtel செய்த வேலை!

போக்கோ சி51 முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட், விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பத்தின் (Virtual RAM Technology) கீழ் 7ஜிபி வரை ரேம், 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 5எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

போக்கோ எம்6 5ஜி முக்கிய அம்சங்கள்: இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் சிப்செட், 50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா செட்டப், 5எம்பி செல்பீ கேமரா பக்கவாட்டில் பொறுத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

ஜியோ எக்ஸ்1 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் இந்த மலிவு விலை 5ஜி போன் ஆனது ரூ.8000 பட்ஜெட்டில் வெளியாகும் என்கிற தகவல் மட்டுமே நம்பகமானதாக இருக்கிறது. லீக்டு அம்சங்கள் எலலாமே நம்ப முடியாதவைகளாக உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco Airtel Partnership to Launch Most Affordable 5G Phone in India Against Jio Cheapest 5G Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X