POCO 5ஜி போன்கள் மீது ஆபர் மழை.. செப்.23 முதல் Flipkart Sale-ல் மிஸ் பண்ண கூடாத 4 மாடல்கள்!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) ஆனது வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளிப்கார்ட் பிளாக் மெம்பர்களுக்கான முன்கூட்டிய அணுகல் 1 நாளுக்கு முன்பாகவே, அதாவது செப்.22 ஆம் தேதியே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிளிப்கார்ட் சேலின் ஒரு பகுதியாக, போக்கோ நிறுவனம் 'போக்கோ ஃபெஸ்டிவ் மேட்னஸ்' என்கிற பிரச்சாரத்தை (Poco Festive Madness Campaign) அறிவித்து உள்ளது. இதன் கீழ் பல்வேறு வகையான போக்கோ ஸ்மார்ட்போன்களின் மீது முன்னெப்போதும் கிடைக்காத தள்ளுபடியை வழங்க உள்ளது.

போக்கோ ஃபெஸ்டிவ் மேட்னஸ்-ன் கீழ் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (Poco X7 Pro 5G), போக்கோ எம்7 5ஜி (Poco M7 5G), போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) மற்றும் போக்கோ எப்7 5ஜி (Poco F7 5G) போன்ற ஸ்மார்ட்போன்கள் நல்ல தள்ளுபடி விலையின் கீழ் விற்கப்படும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதோடு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடிகளும் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட போக்கோ ஸ்மார்ட்போன்கள் மீதான சரியான தள்ளுபடி விவரங்கள் ஆனது வருகிற செப்டம்பர் 15 ஆம் அன்று அறிவிக்கப்படும் என்றும் போக்கோ குறிப்பிட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி பிளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் மெம்பர்கள் இந்த சலுகைகளை செப்டம்பர் 22 ஆம் தேதியே அணுக முடியும்.
போக்கோ எக்ஸ்7 5ஜி: நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது கடந்த ஜனவரி மாதம் ரூ.27,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட், 6550mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
போக்கோ எம்7 5ஜி: நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது கடந்த மார்ச் மாதம் ரூ.9,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 6.88-இன்ச் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி: நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.13,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
போக்கோ எப்7 5ஜி: நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது கடந்த ஜூன் மாதம் ரூ.31,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இது 7,550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட 4 மாடல்களை தவிர, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2025-ன் போது போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G) மற்றும் போக்கோ சி75 5ஜி (Poco C75 5G) ஆகிய மாடல்களும் விலைகுறைப்பு மற்றும் தள்ளுபடியை காண்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதோடு போக்கோவின்மற்ற சில எப்-சீரீஸ், எக்ஸ்-சீரிஸ், எம்-சீரீஸ் மற்றும் சி-சீரீஸ் மாடல்களும் வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை பெறலாம்!


Click it and Unblock the Notifications