நவ.5 வரை பொறுமை அவசியம்! அப்போ தான் இந்த லேட்டஸ்ட் 5G Phone-களை வாங்கலாம்!

|

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக விவோ, சியோமி, சாம்சங் நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான போன்களை அறிமுகம் செய்கிறது இந்த ரியல்மி நிறுவனம்.

ரியல்மி 10 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி

ரியல்மி 10 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி

அதேபோல் 5ஜி போன்களை கூட கம்மி விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம். இந்நிலையில் ரியல்மி 10 5ஜி மற்றும்ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம்.இணையத்தில் வெளிவந்த தகவலின்படி,நவம்பர் 5-ம் தேதி இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

சீன சான்றிதழ்களை பெற்றன

குறிப்பாக இந்த இரண்டு போன் மாடல்கள் சமீபத்தில் தான சீன சான்றிதழ்களை பெற்றன. அதேபோல் இந்த போன்களின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

ரியல்மி 10 5ஜி

ரியல்மி 10 5ஜி

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் 1,080 x 2,400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

 ரியல்மி 10 5ஜி சிப்செட்?

ரியல்மி 10 5ஜி சிப்செட்?

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

ரியல்மி 10 5ஜி கேமரா

ரியல்மி 10 5ஜி கேமரா

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றெ 16எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Dimensity 1080 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதேபோல் 6.7-இன்ச் டிஸ்பிளே, 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி சாதனம் வெளிவரும்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி சிப்செட்

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி சிப்செட்

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் 108எம்பி ரியர் கேமரா வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Photo Courtesy: OnLeaks @91Mobiles

Best Mobiles in India

English summary
Planning to buy the latest 5G smartphone Check out Realme 10 and Realme 10 Pro Plus launching on November 5th: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X