Home
Mobile

வேட்டையாடும் இந்தியர்கள்.. வெறும் ரூ.8,000-க்கு 8GB ரேம், 6000mAh பேட்டரி, Dynamic Bar, 6.56-இன்ச் டிஸ்பிளே!

வெறும் ரூ.8000-க்கு 4ஜிபி வழக்கமான ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 8ஜிபி ரேம், 6000எம்ஏஎச் பேட்டரி, 6.56-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி கேமரா உட்பட பல முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதென்ன மாடல்? சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐடெல், தனது லேட்டஸ்ட் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக ஐடெல் பி55டி (Itel P55T) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சுவாரசியமாக இது ஆப்பிள் ஐபோன்களில் (Apple iPhones) காணப்படும் டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை போலவே டைனமிக் பார் (Dynamic Bar) அம்சத்துடன் வருகிறது.

வேட்டையாடும் இந்தியர்கள்.. வெறும் ரூ.8,000-க்கு 8GB ரேம்!

ஐடெல் பி55டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் நானோ ஆதரவு (Dual SIM Nano Support) கொண்ட ஐடெல் பி55டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 90 சதவிகித ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ (Screen-to-body ratio) மற்றும் 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் (180Hz touch sampling rate) உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவை (HD+ IPS display) கொண்டுள்ளது.

வேட்டையாடும் இந்தியர்கள்.. வெறும் ரூ.8,000-க்கு 8GB ரேம்!

ஐடெல் பி55டி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில், செல்பீ கேமராவை வைப்பதற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் (Hole-punch cutout) உள்ளது. கூடவே நோட்டிபிக்கேஷன்களை விரைவாக பார்ப்பதற்கு உதவும் டைனமிக் பார் அம்சத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யுனிசாக் டி606 (Octa-core Unisoc T606) சிப்செட் மூலம் இயங்குகிறது. மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்தை (Memory Fusion technology) பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 8ஜிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, ஐடெல் பி55டி ஸ்மார்ட்போனில் ஃபிளாஷ் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது.அதில் ஏஐ ஆதரவு (AI Support) உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக, ஃபிளாஷ் ஆதரவு உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

வேட்டையாடும் இந்தியர்கள்.. வெறும் ரூ.8,000-க்கு 8GB ரேம்!

ஐடெல் பி55டி ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் இது ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சத்தை வழங்குகிறது; கூடவே பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Finger Print Sensor) உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 4ஜி, ஓடிஜி (OTG) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, ஐடெல் பி55டி ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6,000mAh பேட்டரி உள்ளது. ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 45 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைமையும் (45 days of standby time), 155 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் டைமையும் (155 hours of music playback time) வழங்கும்.

வேட்டையாடும் இந்தியர்கள்.. வெறும் ரூ.8,000-க்கு 8GB ரேம்!

ஐடெல் பி55டி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஐடெல் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,199 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸ்ட்ரல் பிளாக் (Astral Black) மற்றும் ஆஸ்ட்ரல் கோல்ட் (Astral Gold) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனையை தொடங்கிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Planning to Buy New Smartphone Under Rs 9000 in March 2024 Check Itel P55T Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X