அட்ரா சக்கை Samsung.. ரூ.8,000-க்கு 6.7-இன்ச் டிஸ்பிளே, 6GB ரேம், 50MP கேமரா, 25W சார்ஜிங், 5000mAh பேட்டரி!
6.7-இன்ச் டிஸ்பிளே, 6ஜிபி ரேம், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட மேலும் பல முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
என்ன மாடல்? கடந்த ஏப்ரல் 2023 இல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் ஆக சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி (Samsung Galaxy M14 4G) மாடல இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி மாடலின் விரிவான அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 391பிபிஐ பிக்சல்டென்சிட்டி உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சாம்சங்கின் இந்த புதிய 4ஜி ஸ்மார்ட்போனான் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன்யுஐ 5.1 (OneUI 5.1) உடன் அனுப்பப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எம்14 4ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி ஸ்மார்ட்போனில் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சபையர் ப்ளூ என்கிற 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி-யின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ரூ.8,499 க்கும் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கும். இரண்டுமே அமேசான் இந்தியா வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் 4 ஆம் தேதிதான் சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இது 12ஜிபி வரையிலான ரேம், 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 6000எம்ஏஎச் பேட்டரி, 6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி-யின் விலை: இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டுமே பிளிப்கார்ட் வழியாக மூன்று கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
சாம்சங்கின் புதிய அறிமுகங்கள் இதோடு முடிந்துவிட போவதில்லை, கேலக்ஸி எஸ்24 எஃப்இ (Galaxy S24 FE) ஸ்மார்ட்போனும் கூட கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.54,999 க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்) மாடலின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications








