Home
Mobile

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.6999-க்கு புது போன்.. 6.71-இன்ச் கொரில்லா டிஸ்பிளே, 12GB ரேம், 5000mAh பேட்டரி!

வெறும் ரூ.6999 க்கு.. நேற்று முதல் விற்பனையை தொடங்கிய மோட்டோரோலோ நிறுவனத்தின் மோட்டோ ஜி04 (Moto G04) ஸ்மார்ட்போனிற்கு எதிராக.. ரெட்மி ஏ3 (Redmi A3) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (2024 பிப்ரவரி 23 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.

பிரீமியம் லுக்கை வழங்கும் ஹாலோ டிசைன், கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் டிஸ்பிளே, 12ஜிபி வரையிலான ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களுடன் வரும் ரெட்மி ஏ3ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ ஜி04 மாடலை "அசால்ட் ஆக தூக்கி சாப்பிடுகிறது" என்றே கூறலாம்.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.6999-க்கு புது போன்!

ரெட்மி ஏ3 அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ரெட்மியின் இந்த பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை (HD+ IPSL CD Display) கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 @ 680மெகாஹெர்ட்ஸ் ஜிபியு உடனான 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12 என்எம் சிப்செட் (Octa-Core MediaTek Helio G36 12nm chipset) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.6999-க்கு புது போன்!

கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எல்இடி பிளாஷ் உடனான 8எம்பி (எப்/2.0 அபெர்க்ஷர்) மெயின் கேமரா + "குறிப்பிடப்படாத" செகண்டரி கேமரா உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகள் உள்ளன. கடைசியாக இது 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.6999-க்கு புது போன்!

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.7,299 ஆகும். இருப்பினும் விற்பனை சலுகைகளை பயன்படுத்தினால் இதை வெறும் ரூ.6999 க்கு வாங்க முடியும்.

அடுத்ததாக உள்ள 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,299 க்கும் மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,299 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்ட்களுமே மிட்நைட் பிளாக், ஆலிவ் க்ரீன் மற்றும் லெக் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.6999-க்கு புது போன்!

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள்: ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூரவ வலைத்தளமான எம்ஐ.காம் (Mi.com), அதிகாரப்பூர்வ ஸ்டோர் ஆன எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் (Mi Home Stores) மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது இன்று (பிப்.23) மதியம் 12 மணி முதல் விற்பனையை தொடங்கி உள்ளது!

Best Mobiles in India

English summary
Planning to Buy New Smartphone Under Rs 7000 Check Redmi A3 Price Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X