Home
Mobile

உங்க பட்ஜெட் ரூ.12,000-ஆ.. 5G ஆதரவுடன், தரமான அம்சங்களும் வேணுமா.. அப்போ உங்களுக்கு 5 ஆப்ஷன் இருக்கு!

2024 நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு.. ஒரு நல்ல என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை வாங்கும் யோசனை உங்களிடம் இருந்தால்.. அதிலும் குறிப்பாக ரூ 12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் "கண்களை மூடிக்கொண்டு" வாங்க கூடிய ஸ்மார்ட்போன்களை (New Smartphone Under Rs.12,000) தேடிக்கொண்டு இருந்தால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துளீர்கள். ஏனென்றால், மேற்கண்ட தகுதிகளை (என்ட்ரி லெவல் மற்றும் பட்ஜெட் ரேன்ஜ்) அடிப்படையில் பிரபலமான 5 ஸ்மார்ட்போன்களை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டு உள்ளோம்:

பெரும்பாலான என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்கள் ஆனது முதல் முறையாக ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்ட உருவாக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக ஃபீச்சர் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு திடீரெனெ ஹை-எண்ட் அல்லது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கி கொடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான சிக்கல் - மிகவும் குறைவான பயன்படுகளுக்காக அதிக செலவில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி கொடுப்பது. ஆகவே முதல் ஸ்மார்ட்போன் மலிவான விலையில் இருப்பது தான் - புத்திசாலித்தனம்.

ரூ.12,000 பட்ஜெட்டில் 5G ஆதரவு.. உங்களுக்கு 5 ஆப்ஷன் இருக்கு!

சுவாரசியமாக தற்போது இந்திய சந்தையில் ரூ .12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 5ஜி ஆதரவுடன் வரும் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால்.. "4ஜி நெட்வொர்க்கில் இருந்து 5ஜி-க்கு அப்கிரேட் ஆன மாதிரியும் இருக்கும்; அதே சமயம் முதல் முறையாக ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய மாதிரியும் இருக்கும்!" என்கிற சூழ்நிலை நிலவுகிறது. சுருக்கமாக இதுதான் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை வாங்க சரியான நேரம்! அதெல்லாம் சரி, எந்த 5ஜி போனை வாங்கலாம்?

1. சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 ஆகும். இது 2024 ஆம் ஆண்டில் ரூ.11,000-க்கும் குறைவான விலையில், கருத்தில் கொள்ளத்தக்க ஒரு சிறந்த 5ஜி எனேபிள்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.5-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவைகளை வழங்குகிறது.

2. மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 ஆகும். ரூ.12,000-க்கு கீழ் உள்ள சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ், ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் எச்டி+ ரெசல்யூஷன் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

3. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,498 ஆகும். இது 5ஜி கனெக்டிவிட்டி உடன் கூடிய சிறந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 720பி ரெசல்யூஷன் உடனான 6.56-இன்ச் 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஐபி64 ரேட்டிங் (இது சந்தையில் மிகவும் மலிவான நீர்-எதிர்ப்பு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்), 50எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

4. நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499 ஆகும். இது ஸ்டாக் ஆண்ட்ராய்டை வழங்கும் மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். எச்எம்டி நிறுவனத்தின் இந்த மாடல் முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது; மேலும் பேஸிக் மாடல் கூட 6 ஜிபி ரேம்-ஐ வழங்குகிறது; இது மென்மையான மல்டி டாஸ்கிங்கை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 20W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி மற்றும் 50எம்பி ஏஐ கேமராவும் உள்ளது.

5. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,749 ஆகும். இதுவும் ரூ.11,000 க்கும் குறைவான விலையில் உள்ள மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், எப்எச்டி பிளஸ் மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பெரிய 6.79-இன்ச் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Planning To Buy New Smartphone Under Rs 12000 With 5G Support Then You Have 5 Best options
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X