Home
Mobile

போனா வராது.. பொழுது போனா கிடைக்காது.. இந்த iPhone மாடல் மீது ரூ.13,000 விலை குறைப்பு.. கூடவே ரூ.26,000 ஆபர்!

ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்களான ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) இந்தாண்டு.. அதாவது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும். வழக்கம் போல இந்த முறையும் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும், பழைய ஐபோன் மாடல்கள் மீது அதிகாரப்பூர்வ விலைக்குறைப்புகளை ஆப்பிள் அறிவிக்கும். அதுவரை காத்திருக்கும் அளவிற்கு உங்களுக்கு பொறுமை இல்லை என்றால்.. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) அறிவித்துள்ள இந்த ஐபோன் ஆபர் - முழுக்க முழுக்க உங்களுக்கானதாக இருக்கலாம்!

என்ன மாடல் மீது.. என்னென்ன ஆபர் கிடைக்கிறது? பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 14 மாடலை ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் விற்பனை செய்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.56,999 க்கு விற்பனை செய்கிறது. இது எந்தவிதமான வங்கி சலுகைகளும் இல்லாத நேரடி தள்ளுபடி விலையாகும். இதுதவிர்த்து உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ஐபோன் 14 மாடலின் இறுதி ஆபர் விலையை இன்னும் குறைக்க முடியும்.

இந்த iPhone  மாடல் மீது ரூ.13,000 விலை குறைப்பு! கூடவே ரூ.26,000 ஆபர்!

அதெப்படி? பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 14 ஆனது ரூ.56,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இதுவொரு நேரடி விலைக்குறைப்பாகும். எக்ஸ்சேன்ஜ் ஆபரை பொறுத்தவரை, உங்களிடம் பழைய ஐபோன் 12 இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பினால், அதற்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் உங்களுடைய பழைய ஐபோன் 13 மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்தால், அதற்கு ரூ.26,000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும். மற்ற எல்லா எக்ஸ்சேன்ஜ் ஆபர்களை போலவும், இந்த ஆபரிலும் கூட, நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் பழைய போனின் "மதிப்பு", அதன் "நிலைமையை" பொறுத்தே, அந்த போனிற்கான எக்ஸ்சேன்ஜ் வேல்யூ நிர்ணயம் செய்யப்படும்.

இந்த iPhone  மாடல் மீது ரூ.13,000 விலை குறைப்பு! கூடவே ரூ.26,000 ஆபர்!

ஆப்பிள் ஐபோன் 14-ன் முக்கிய அம்சங்கள்: இது 6.06-இன்ச் டிஸ்பிளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12 எம்பி செல்பீ கேமரா, 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ், ஆப்பிள் ஐஓஎஸ் 16 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? ஐபோன் 16 சீரீஸில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றம் கொண்டுவரப்படலாம். இந்த மாற்றம் ஐபோன் 16 சீரீஸின் கேமரா செட்டப்பில் நிகழ்த்தப்படலாம். இதற்காக ஆப்பிள் நிறுவனம் அதன் வழக்கமான மூலைவிட்ட கேமரா அமைப்பை (Diagonal Camera Setup) தவிர்த்துவிட்டு, செங்குத்தான கேமரா அமைப்பை (Vertical Camera Layout) மீண்டும் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த iPhone  மாடல் மீது ரூ.13,000 விலை குறைப்பு! கூடவே ரூ.26,000 ஆபர்!

அதாவது பழைய ஐபோன் எக்ஸ் (iPhone X) மற்றும் ஐபோன் 11 (iPhone 11) மாடல்களில் நாம் பார்த்த வெர்டிகல் கேமரா செட்டப்பில் நாம் பார்த்த டிசைன் மீண்டும் ஐபோன் 16 சீரீஸில் கொண்டு வரப்படலாம். இது சாத்தியமாகும் பட்சத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஐபோனிற்கு கிடைத்த மிக முக்கியமான வடிவமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

புதிய கேமரா செட்டப் டிசைனை தவிர, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 மாடலில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 சீரீஸில் புதிய கேப்சர் பட்டனை (Capture Button) சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டன் ஐபோன் 16 மாடலின் வலது பக்கத்தில் ஒரு டச்-சென்சிட்டிவ் பட்டனாக (Touch-Sensitive Button ) செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இது ஜூமிங், போகஸ் மற்றும் கிளிக் போன்ற செயல்பாடுகளை எளிமையாக்கி புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Planning to buy new iPhone at Cheap Cost Check Flipkart Price Cut and Exchange Offer on iPhone 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X