இந்த விஷயம் தெரிஞ்சா.. புதுசா பட்ஜெட் போன் வாங்கிய எல்லோருமே கதறுவாங்க!

|

"ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான், பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கினேன்" என்று கூறும் அனைவருமே - தத்தம் மனதை தேற்றிக்கொள்ளவும்.

ஏனென்றால்.. நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டீர்கள் என்றுதான் கூற வேண்டும்!

அக்.14 வரை வெயிட் பண்ணி இருக்கலாம்!

அக்.14 வரை வெயிட் பண்ணி இருக்கலாம்!

ஏனென்றால்.. வருகிற அக்.14 ஆம் தேதியன்று - அட்டகாசமான டிசைன், க்ளீன் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ், பெரிய பேட்டரி போன்ற அம்சங்களுடன் - பிரபலமான நிறுவனத்தின் ஒரு சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

அது ரெட்மி ஏ1 பிளஸ் ஆகும்!

அது ரெட்மி ஏ1 பிளஸ் ஆகும்!

நீங்களொரு தீவிரமான ரெட்மி (Redmi) ரசிகர் என்றாலும் சரி, அல்லது சூப்பர் பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவராக இருந்தாலும் சரி.. வருகிற அக்.14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனை பற்றி கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

இதுவொரு சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்!

இதுவொரு சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும்!

ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ள ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) ஆனது நிச்சயம் "சூப்பர் பட்ஜெட்" விலைப்பிரிவின் கீழ் தான் வெளியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

புதிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ள சியோமி நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனை விளம்பரம் செய்யவும் தொடங்கி உள்ளது.

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

ரெட்மி ஏ1-ஐ தொடர்ந்து ஏ1 பிளஸ்!

ரெட்மி ஏ1-ஐ தொடர்ந்து ஏ1 பிளஸ்!

நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் தான் Xiaomi நிறுவனம் அதன் Redmi A1 மாடலை அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து ஏ1 பிளஸ் மாடல் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது.

கடந்த மாதம் அறிமுகமான ரெட்மி ஏ1 ஆனது 8-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 SoC மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

Redmi A1+ ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை வழங்கும்?

Redmi A1+ ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை வழங்கும்?

நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, சியோமி நிறுவனம் அதன் ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை ஒரு பிரத்யேக மைக்ரோசைட் வழியாக வெளிப்படுத்தியுள்ளது.

அதன் வழியாக, Redmi A1+ ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.

இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

மூன்று கலர் ஆப்ஷன்கள்!

மூன்று கலர் ஆப்ஷன்கள்!

சியோமி நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களின்படி, ரெட்மி A1+ ஸ்மார்ட்போன் ஆனது நீலம், பச்சை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

இருப்பினும், அந்தந்த கலர் ஆப்ஷன்களின் துல்லியமான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுகுறித்த விவரங்கள் அறிமுகத்தின் போது தெரிய வரும்.

கேமரா செட்டப் எப்படி இருக்கும்?

கேமரா செட்டப் எப்படி இருக்கும்?

ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது ஃபிளாஷ் உடனான டூயல் ரியர் செட்டப்பை கொண்டிருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது பேனலில் லெதர் டெக்ஷர் ஃப்னிஷை கொண்டிருக்கும், மேலும் இது பிங்கர் ஃப்ரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

பெரிய பேட்டரியுடன் 'க்ளீன்' ஆன ஓஎஸ்!

பெரிய பேட்டரியுடன் 'க்ளீன்' ஆன ஓஎஸ்!

சியோமி நிறுவனத்தின் மைக்ரோசைட்டின் படி, ரெட்மி ஏ1 பிளஸ் மாடல் ஆனது "க்ளீன்" ஆன ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் MIUI சாப்ட்வேர் ஸ்கின் இல்லாமல், முழுமையாக ஆண்ட்ராய்டு 12-இன் கீழ் மட்டுமே இயங்கும்.

மேலும் Redmi A1+ ஆனது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை நிர்ணயம்குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனாலும் இது ரூ.9,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி நிறுவனத்திடம் இருந்து கடும் போட்டியை எதிர்கொள்வதால், ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது ரூ.10,000 க்குள் என்கிற விலைக்கே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

ரூ.10,000 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்?

ரூ.10,000 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்?

ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது ரூ.10,000 க்குள் அறிமுகமாகும் பட்சத்தில், இது 10கே பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்களின் பட்டியலில் கூட இடம்பெறலாம்.

விலையை மீறிய டிசைன், 5,000mAh பேட்டரி, டூயல் ரியர் கேமரா செட்டப், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (அவுட்-ஆஃப்-பாக்ஸ்), வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் கொண்ட டிஸ்பிளே என ரூ.10,000 க்கு.. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? இதுவே போதும்!

Photo Courtesy: Redmi

Best Mobiles in India

English summary
Planning to Buy New Budget Price Smartphone Redmi A1 Plus India launch on October 14th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X