சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!

|

சீனாக்காரங்க யோசிக்கிற விதமே வேற லெவலில் இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வண்ணம் பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்று, மிகவும் புத்திசாலிதனமான முறையில் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது!

அதென்ன நிறுவனம்? அது அறிமுகம் செய்துள்ள 3 புதிய ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் என்ன? Phone-களை அறிமுகம் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

'நோட்' செய்யப்பட வேண்டிய நோட் சீரீஸ்!

'நோட்' செய்யப்பட வேண்டிய நோட் சீரீஸ்!

நாம் இங்கே பேசும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் - ரெட்மி (Redmi) ஆகும். இந்நிறுவனம், மிகவும் பிரபலமான அதன் நோட் சீரீஸின் (Note Series) கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

அவைகள் - ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12), ரெட்மி நோட் 12 ப்ரோ (Redmi Note 12 Pro) மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note 12 Pro Plus) ஆகும்!

எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!

இந்த 3 போனும்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்!

இந்த 3 போனும்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்!

ரெட்மி நிறுவனத்தின் நோட் 12 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 புதிய ஸ்மார்ட்போன்களுமே வெவ்வேறு வகையான தேவைகளை கொண்ட பயனர்களையும், வெவ்வேறு வகையான பட்ஜெட்டை கொண்ட வாடிக்கையாளர்களையும் கவரும்படியான அம்சங்களையும், விலை நிர்ணயத்தையும் பெற்றுள்ளது!

சீனாக்காரன் மூளை இருக்கே.. அடடா!

சீனாக்காரன் மூளை இருக்கே.. அடடா!

அதாவது வெண்ணிலா மாடல் ஆன ரெட்மி நோட் 12 ஆனது 5ஜி ஆதரவை பட்ஜெட் விலையின் கீழ் வழங்க, மறுகையில் உள்ள ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது மிட் ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் பிரீமியம் அம்சங்களை பேக் செய்கிறது!

இதை Redmi நிறுவனத்தின் மிகவும் புத்திசாலித்தனமான நகர்வு என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.

சரி வாருங்கள் இந்த 3 ஸ்மார்ட்போன்களை என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? என்னென்ன அம்சங்களை வழங்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்!

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

ரெட்மி நோட் 12 5G: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

ரெட்மி நோட் 12 5G: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- 1080x2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.67 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 240Hz வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 13
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட்
- 8 ஜிபி வரை ரேம்
- 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 48MP + 2MP டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8MP செல்பீ கேமரா
- 33W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி

ரெட்மி நோட் 12 ப்ரோ: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

ரெட்மி நோட் 12 ப்ரோ: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- 1,080x2,400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- Android 12 OS-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 13
- 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட்
- 50MP சோனி IMX766 OIS சென்சார் + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 16MP செல்பீ கேமரா
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- 1080x2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.67-இன்ச் ஃபுல்-எச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 13
- மீடியாடெக் Dimensity 1080 SoC சிப்செட்
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- 200MP மெயின் OIS சென்சார் + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh

எக்ஸ்ப்ளோரர் எடிஷனும் வாங்க கிடைக்கும்!

எக்ஸ்ப்ளோரர் எடிஷனும் வாங்க கிடைக்கும்!

ரெட்மி நோட் 12 சீரீஸின் கீழ் Redmi Note 12 Explorer Edition என்கிற மாடலும் வாங்க கிடைக்கும், அதற்கும் ப்ரோ பிளஸ் மாடலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் - 210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4300mAh பேட்டரி மட்டுமே ஆகும்.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் ஆனது கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால், ரெட்மி நோட் 11 சீரீஸ் ஆனது ஏற்கனவே இங்கே வாங்க கிடைக்கிறது!

Redmi Note 12 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Redmi Note 12 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

4ஜிபி ரேம் + 128ஜிபி - இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.13,600
6ஜிபி ரேம் + 128ஜிபி - தோராயமாக ரூ.14,600
8ஜிபி ரேம் + 128ஜிபி - தோராயமாக ரூ.17,000
8ஜிபி ரேம் + 256ஜிபி - தோராயமாக ரூ.19,300

வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?

Redmi Note 12 Pro-வின் விலை விவரங்கள்:

Redmi Note 12 Pro-வின் விலை விவரங்கள்:

6ஜிபி ரேம் + 128ஜிபி - தோராயமாக ரூ.19,300
8ஜிபி ரேம் + 128ஜிபி - தோராயமாக ரூ.20,400
8ஜிபி ரேம் + 256ஜிபி - தோராயமாக ரூ.22,700
12ஜிபி ரேம் + 256ஜிபி - தோராயமாக ரூ.24,900

Redmi Note 12 Pro+ மாடலின் விலை என்ன?

Redmi Note 12 Pro+ மாடலின் விலை என்ன?

8ஜிபி ரேம் + 256ஜிபி - தோராயமாக ரூ.23,000
12ஜிபி ரேம் + 256ஜிபி - தோராயமாக ரூ.26,000

Photo Courtesy: Redmi / Twitter

Best Mobiles in India

English summary
Planning to buy latest phone then you should not miss these 3 new specs packed phones from Redmi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X