சபாஷ் சரியான போட்டி.. பிப்.18 அறிமுகமாகும் புது Pixel மாடல்.. ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட பழைய Pixel மாடல்!
கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் 10 சீரீஸின் கீழ் புதிய "பட்ஜெட் விலை" மாடல் ஆக பிக்சல் 10ஏ (Pixel 10a), நாளை, அதாவது பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில்.. முன்னதாக வெளியான பிக்சல் 9ஏ மாடல் மீது பெரிய அளவிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிக்சல் 9ஏ மீதான விலை குறைப்பு: பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில், தற்போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் அறிமுகமான போது இதன் விலை ரூ.49,999 ஆக இருந்தது. ஆக ரூ.10,000 நேரடி விலைகுறைப்பை பெற்றுள்ளது.

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவு
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு
புதிய கூகுள் பிக்சல் 10ஏ என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 -ஐ சுற்றிய அல்லது ரூ.50,000 க்கு மேலான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 119.7-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர்கொண்ட 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா


Click it and Unblock the Notifications








