இனி எங்கும் Google மயம்.. ரூ.15000 - ரூ.20000 ப்ரைஸ் கட்.. ஒரே நேரத்தில் சர்ர்னு விலை குறைந்த 3 Pixel போன்கள்!
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 10 சீரீஸின் (Google Pixel 10 Series) கீழ் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், கடந்த ஆண்டு அறிமுகமான "பழைய" பிக்சல் 9 சீரிஸ் (Pixel 9 Series) ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்புகளை பெற்றுள்ளன.
அதாவது பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட 3 மாடல்கள் மீதான விலை குறைப்பு மற்றும் தள்ளுபடிகள் ஆனது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் பிரதிபலிக்கிறது.

பிக்சல் 9 சீரிஸ் பழைய விலை VS புதிய விலை விவரங்கள்: ரூ.1,24,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 விலை குறைப்பைப் பெற்றுள்ளது, இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.1,04,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போன் கூகுளின் சொந்த ஸ்டோரில் ரூ.1,14,999 க்கு வாங்க கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இதேபோல ரூ.1,09,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசுயாக ரூ.79,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ+ இசிம்) ஆதரவு
- 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடனான 6.3-இன்ச் ஆக்சுலா ஓஎல்இடி டிஸ்பிளே
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட்
- 50 மெகாபிக்சல் ஆக்டா பிடி வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம்) ப்ரைமரி கேமரா
- 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரி
பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் உள்ள அதே சிம் ஆதரவு, சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட்
- பிக்சல் 9 ப்ரோ மாடலில் 6.3-இன்ச் சூப்பர் ஆக்சுவா (எல்டிபிஓ) ஓஎல்இடி டிஸ்பிளே
- பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் பெரிய 6.8-இன்ச் சூப்பர் ஆக்சுவா (எல்டிபிஓ) ஓஎல்இடி டிஸ்பிளே
- இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளன
- 50எம்பி ஆக்டா பிடி வைட் கேமரா + 48எம்பி குவாட் பிடி அல்ட்ரா வைட் கேமரா + (30எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 48எம்பி குவாட் பிடி டெலிபோட்டோ கேமரா
- ஆட்டோஃபோகஸுடன் கூடிய 42எம்பி டூயல் பிடி செல்பீ கேமரா
- பிக்சல் 9 ப்ரோ மாலில் 4,700எம்ஏஎச் பேட்டரி
- பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் சற்றே பெரிய 5,060எம்ஏஎச் பேட்டரி
- இரண்டுமே 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் Qi சார்ஜர்கள் மூலம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.
புதிய பிக்சல் 10 சீரீஸ் விலை விவரங்கள்:
1. பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.79,999
2. பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,09,999
3. பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,24,999
4. பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,72,999


Click it and Unblock the Notifications








