Home
Mobile

போடு.. இந்த Google Pixel மாடல் மீது ரூ.15000 விலை குறைப்பு.. பிளிப்கார்ட்டில் ஆர்டர் மழை.. எந்த மாடல்?

கூகுள் (Google) நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடத்தும் அதன் மேட் பை கூகுள் 2025 நிகழ்வில் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் பழைய பிக்சல் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலைக்கு இறங்கியுள்ளன. அந்த பட்டியலில் பிக்சல் 9 (Pixel 9) மாடலும் அடக்கம்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் ப்ரீடம் சேல் 2025 (Flipkart Freedom Sale 2025) இன் ஒரு பகுதியாக, பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது எந்த விதமான வங்கி தள்ளுபடியும் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட்டும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும். நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி ரூ.79,999 ஆகும்.

போடு.. இந்த Google Pixel மாடல் மீது ரூ.15000 விலை குறைப்பு!

பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 60Hz முதல் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் ஆக்சுவ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்ட்டை பொறுத்தவரை டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் ஆக்டா பிடி வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8x சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும்.

பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் க்யூஐ ஆல் சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக், வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி (NFC), கூகுள் கேஸ்ட் (Google Cast), ஜிபிஎஸ் (GPS), டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் (Dual Band GNSS), பெய்டூ (BeiDou), க்ளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

புதிய பிக்சல் 10 சீரீஸை பொறுத்தவரை, முன்னதாக இதன் கீழ் பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) என மொத்தம் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ஆனது ஃபோல்ட் மாடல் உடனடி அறிமுகத்தை காணாது என்று பரிந்துரைக்கிறது. பிக்சல் 10 சீரீஸ் மாடல்கள் கூகுளின் டென்சர் ஜி 5 சிப்செட்களால் இயக்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pixel 9 gets Price Cut in Flipkart Freedom Sale 2025 Ahead Pixel 10 Launch on August 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X