Google-ன் லேட்டஸ்ட் Pixel போன் மீது ரூ.5000 விலை குறைப்பு.. என்ன மாடல்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 16இ (iPhone 16e) மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமான கூகுள் (Google) நிறுவனத்தின் பிக்சல் 9ஏ (Pixel9a) மாடலின் இந்திய விற்பனை வருகிற 16 ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலைப்பாட்டில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) ஆனது பிக்சல் 9 (Pixel 9) ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் (Offer Price) விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
பிக்சல் 9 பிளிப்கார்ட் ஆபர்: கூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2024 இல், அதன் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது இந்த சீரிஸின் கீழ பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் ஆகின.

இதில் வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 9 ஸ்மார்ட்போன் (12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) ஆனது தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.5000 தள்ளுபடியை பெற்று, அசல் அறிமுக விலையான ரூ.79,999 க்கு பதிலாக ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ஏப்ரல் 16 முதல் விற்பனைக்கு வரவுள்ள பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் (8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்) விலை ரூ.49,999 ஆகும்.
பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+ இசிம்) சப்போர்ட் உடன் வரும் பிக்சல் 9 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. இது 7 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும். இது 60ஹெர்ட்ஸ் முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 கவர் உடனான 6.3-இன்ச் அக்சுவா ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசருடன் டென்சர் ஜி4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் ஆக்டா பிடி வைட்-ஆங்கிள் கேமரா (1/1.31-இன்ச் இமேஜ் சென்சார் சைஸ் மற்றும் 8எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம்) என்கிற பிரைமரி கேமரா + 1/2.55-இன்ச் சென்சார் சைஸ் கொண்ட 48 மெகாபிக்சல் குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 10.5-மெகாபிக்சல் டூயல் பிடி செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்ப்ளர் மற்றும் நைட் சைட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த கேமரா செட்டப்பால் வினாடிக்கு 24/30/60 பிரேம்களில் 4ஏக் வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும். பேட்டரியை பொறுத்தவரை பிக்சல் 9 ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இதற்கான 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் தனியாக விற்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனில் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. வயர்டு சார்ஜிங் தொழில்நுட்பம் சுமார் 30 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 55 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கும் அதிகமான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே, நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ், டூயல் ரியர் கேமரா செட்டப், 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 5100mAh பேட்டரி, கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications