Home
Mobile

என்னமா இப்படி பண்றீங்களே மா.. போற போக்கை பார்த்தா புது Pixel 9a-வை விட்டுட்டு இதை வாங்குவாங்க போலயே!

பிக்சல் 9 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 9ஏ (Pixel 9a) மாடலின் இந்திய விற்பனை ஆரம்பித்துள்ள நிலையில்.. க்ரோமா (Croma) வலைத்தளம் ஆனது பிக்சல் 8ஏ (Pixel 8a) ஸ்மார்ட்போன் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடியை அறிவித்து, அதை நம்ப முடியாத ஆபர் விலையில் விற்பனை செய்து வருகிறது.

தற்போது க்ரோமா வலைத்தளத்தில் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.52,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.

புது Pixel 9a-வை விட்டுட்டு இதை வாங்குவாங்க போலயே!

நினைவூட்டும் வண்ணம் புதிய கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது சிங்கிள் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பிக்சல் 7ஏ உடன் ஒப்பிடும் போது பிக்சல் 8ஏ மாடலின் டிஸ்பிளே 40 சதவீதம் பிரகாசமாக இருப்பதாக கூகுள் கூறுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5x ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை, இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும். கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இது 4492mAh பேட்டரியுடன் வருகிறது, கூகுளின் கூற்றுப்படி, இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ரீடெயில் பாக்ஸில் ஒரு சார்ஜர் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே

- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்

- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்

- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240fps), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

பிக்சல் 9ஏ VS பிக்சல் 8ஏ: உண்மையில் இப்போது பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனிற்கும் புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனிற்கும் இடையேயான விலை வித்தியாசம் ரூ.12,000 மட்டுமே ஆகும். ஒருவேளை "வாங்குறதே வாங்குறோம், புதிய மாடலை வாங்கினால் என்ன!" என்கிற மைண்ட் செட்டிற்கு நீங்கள் வந்துவிட்டால்.. பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான நான்கு நல்ல காரணங்கள் இதோ:

முதல் - காரணம் பிக்சல் 9ஏ மாடல் ஆனது ஒப்பீட்டளவில் பவர்புல் ஆன பெர்பார்மென்ஸை வழங்குகிறது. இரண்டாவது காரணம் - இந்த பட்ஜெட் பிரிவின் கீழ் (அதாவது ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்) பெஸ்ட் ஆன கேமராக்களை பிக்சல் 9ஏ கொண்டுள்ளது. மூன்றாவது காரணம் - பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் மிகவும் பயனுள்ள கூகுள் ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது. நான்காவது காரணம் - பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனிற்கு அடுத்த 7 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்கும்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Pixel 8a Selling At Discounted Price in Croma Online After Pixel 9a Sale Started in India Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X