Google கலக்கல்.. புதுசு வந்ததும் பழைய பிக்சல் போன் மீது ரூ.15,000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a ) அறிமுகமானதும் பழைய மாடல் மீது மிகப்பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. நாம் இங்கே பேசுவது கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 28% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.52,999 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அதாவது பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் மீது ரூ.15,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. கூடவே போன் யுபிஐ பரிவர்த்தனை மூலம் 1% தள்ளுபடி மற்றும் வங்கியின் சலுகைஇபின் கீழ் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் ஆகிய சலுகைகளும் கூட பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை வாங்கும் போது கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1080 x 2400 ரெசல்யூஷன், 430 பிபிஐ, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது கூகுளின் டென்சர் ஜி3 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5x ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த கேமரா செட்டப்பில் சில ஏஐ அம்சங்களும் உள்ளன. அதில் பெஸ்ட் டேக், மேஜிக் எடிட்டர், ஆடியோ மேஜிக் ஏரேசர் போன்றவைகள் அடங்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் பில்ட் இன் ஏஐ அசிஸ்டென்ட் ஆன ஜெமினியும் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்காக பல்வேறு பணிகளை செய்யும். கடைசியாக து 4492mAh பேட்டரியுடன் வருகிறது, கூகுளின் கூற்றுப்படி, இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். ரீடெயில் பாக்ஸில் ஒரு சார்ஜர் இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர்களில், ஏப்ரல் 2025 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்; சரியான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- டூயல் சிம் (நானோ+இசிம்)
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்
- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240fps), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு


Click it and Unblock the Notifications








