Home
Mobile

சுளுக்கு எடுத்த சுந்தர்.. Apple-க்கு ஆப்படித்த Google.. iPhone 15-ஐ வச்சி செய்யும் விலையில் Pixel 8, 8 Pro!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடல்களுக்கு இணையாக இந்த 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்றால்.. அது நிச்சயம் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 சீரீஸ் (Google Pixel 8 Series) மாடல்களாகத்தான் இருக்க முடியும்.

அப்படியான பிக்சல் 8 சீரிஸ் இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி நடக்கும் மேட் பை கூகுள் நிகழ்வில் (Made by Google) அறிமுகம் செய்யபபட உள்ளன.

iPhone 15-ஐ வச்சி செய்யும் விலையில் Pixel 8, Pixel 8 Pro!

இதற்கிடையில் கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் (Price Range) மற்றும் கேமரா அம்சங்கள் (Camera Specifications) குறித்த விவரங்கள், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் (X) தளம் வழியாக லீக் ஆகியுள்ளது.

கமிலா (Kamila) என்கிற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள புகைப்படத்தின்படி, பிக்சல் 7 உடன் ஒப்பிடும்போது பிக்சல் 8 ஆனது சிறிதளவிலான விலை உயர்வை காணும். அதாவது இதன் ஆரம்ப விலை $699 (இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.58,100) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பிக்சல் 7 மாடலின் ஆரம்ப விலையை விட $100 அதிகமாகும்.

இருப்பினும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை நிர்ணயமானது கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடலின் விலையை போலவே இருக்கும். அதாவது இதன் விலை $899 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.74,700 ஆகும்.

கூகுள் நிறுவனம் ஏன் அதன் வெண்ணிலா வேரியண்ட் ஆன பிக்சல் 8 விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் ப்ரோ வேரியண்ட் ஆன பிக்சல் 8 ப்ரோவின் விலையை ஏன் அதிகரிக்கவிலை என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் 2 விஷயங்களை மட்டும் எங்களால் உறுதியாக கூற முடியும்

முதல் விஷயம்- பிக்சல் 8 மீதான விலை உயர்வு, அதை வாங்க திட்டமிட்டுள்ள பலருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். இரண்டாவது விஷயம் - விலை உயர்த்தப்பட்டபின்பும் கூட பிக்சல் 8 ஆனது ஆப்பிளின் புதிய ஐபோன் 15 மாடலை விட மலிவானதாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் அமெரிக்கவில் ஐபோன் 15-ன் விலை $799 முதல் தொடங்குகிறது

ஆக ஐபோன் 15 மாடலை அல்லது அதே சீரிஸின் கீழ் வாங்க கிடைக்கும் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடல்களின் விற்பனையை 2 பிக்சல் 8 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே கடுமையாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

விலை நிர்ணயத்தை தவிர, பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோவின் கேமரா அம்சங்களும் லீக் ஆகியுள்ளன. பிக்சல் 8 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50எம்பி ப்ரைமரி ஷூட்டர் + ஒரு மேக்ரோ கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்கலாம்.

மறுகையில் உள்ள பிக்சல் 8 ப்ரோ மாடலில் கூடுதலாக 5எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் திறன் கொண்ட 48எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் இவ்விரு மாடல்களுமே 10.5எம்பி செல்பீ கேமராவை பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் இவைகள் ரியல் டோன், மேஜிக் ஏரேசர், போட்டோ அன்ப்ளர், மேம்படுத்தப்பட்ட நைட் சைட் மற்றும் பல போன்ற கேமரா அம்சங்களையும் பெறலாம்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இந்த இரண்டு பிக்ஸ்ல மாடல்களும் சிபியு (CPU) மற்றும் ஜிபியு (GPU) செயல்திறனுக்கான மேம்படுத்தல்களுடன் டென்சர் ஜி3 சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, பிக்சல் 8 மாடலில் சற்றே சிறிய 6.17 இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். அதே சமயம் பிக்சல் 8 ப்ரோவில் 6.7 இன்ச் ஸ்கிரீன் பேக் செய்யப்படலாம். பிக்சல் 8 ப்ரோ மாடலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக உடல் வெப்பநிலை சென்சார் (body temperature sensor) சேர்க்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pixel 8 and Pixel 8 Pro Price Details Leaked Ahead Made by Google Event on October 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X