டிஸ்ப்ளேவின் கீழ் செல்பி கேமராவுடன் வருகிறதா பிக்சல் 6: இதோ வெளியான தகவல்!

|

பிக்சல் 6 சாதனத்தில் டிஸ்ப்ளேவின் கீழ் (Under Display) செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள் பிக்சல் 6 குறித்த தகவல்

கூகுள் பிக்சல் 6 குறித்த தகவல்

பிக்சல் 5 உலக நாடுகளின் சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் கூகுள் பிக்சல் 6 குறித்த தகவல்கள் முன்னதாகவே கசியத் தொடங்கிய நிலையில் தற்போது இந்த சாதனம் டிஸ்ப்ளேவுக்கு கீழ் பகுதியில் செல்பி கேமராவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

டிஸ்ப்ளேவுக்கு அடியில் கேமரா

டிஸ்ப்ளேவுக்கு அடியில் கேமரா

முன்னதாக பேட்டன்லி ஆப்பிள் வெளியிட்ட தகவலின்படி வருகிற பிக்சல் சாதனம் பாப் அப் கேமரா, பஞ்ச் ஹோல் வடிவமைப்பு உள்ளிட்டை எதையும் கொண்டிருக்காது என தெரிவித்தது. இதுகுறித்த தகவல் வெளியான நிலையில் சாதனத்தின் டிஸ்ப்ளேவுக்கு அடியில் கேமரா இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது.

இரட்டை செல்பி கேமரா

இரட்டை செல்பி கேமரா

அதேபோல் பிக்சல் 5 ஸ்மார்ட்போனை போன்றே இதிலும் ஒரு ஃபிளாஷ் உடன் இரட்டை செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கூகுள் மட்டுமின்றி அடுத்தடுத்து பல நிறுவனங்களும் டிஸ்ப்ளே கீழ் செல்பி கேமரா முறையை கொண்டு வருவார்கள் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 865 மூலம் இயக்கப்படும் என தகவல்

ஸ்னாப்டிராகன் 865 மூலம் இயக்கப்படும் என தகவல்

அதேபோல் கூகுள் பிக்சல் 6 ஸ்னாப்டிராகன் 865 மூலம் இயக்கப்படும் எனவும் இது 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pixel 6 Will Reportedly Launching With Under Display Selfie Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X