Home
Mobile

கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள்வரும் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளன.

பிக்சல் 6

பிக்சல் 6 மற்றும் பிக்சல் ப்ரோ மாடல்களில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்போன்றவை இடம்பெற்றுளளன. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ்.அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்சல் 6 அம்சங்கள்

பிக்சல் 6 அம்சங்கள்

பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080x2,4000 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது பிக்சல் 6 ஸ்மார்ட்போன்.

ர்ட்போனின் பின்புறம் 50எம்பி

பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்( f/1.85) என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான பிக்சல் 6 ஸ்மார்ட்போன். இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் 4614 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் wired பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 21 வாட் wireless பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது பிக்சல் 6 ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், பாரோமீட்டர், பைரோமீட்டர், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போன்.

பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் QHD+ LTPO OLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,440x3,120 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 19:5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.

ர்ட்போனின் பின்புறம்

பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11.1எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ப்ரோ.

 ஸ்மார்ட்போனில் 5003

இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5003 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட் wired பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,23 வாட் wireless பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அசத்தலான பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் 5ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.

 ஆரம்ப விலை

ஆரம்ப விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட பிக்சல் 6 மாடலின் விலை 599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.45,000)
12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட பிக்சல் 6 ப்ரோ மாடலின் விலை 899 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 67,500)

Best Mobiles in India

English summary
Pixel 6, Pixel 6 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X