Home
Mobile

அக்டோபர் 19: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 6,பிக்சல் 6 ப்ரோ மாடல்கள்.!

கூகுள் நிறுவனம் வரும் அக்டோபர் 19-ம் தேதி புதிய கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஆன்லைனில் கசிந்த கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ

அதேபோல் இந்த இரண்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆன்லைனில் கசிந்த கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின்
அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கூகுள் பிக்சல் 6

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 50எம்பி மெயின் கேமரா

இந்த கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா வசதி உள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியம். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4614எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கூகுள் பிக்சல் 6 ப்ரோ

கூகுள் பிக்சல் 6 ப்ரோ

கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.71-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 6 ப்ரோ

கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

று இணைப்பு ஆத

கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த இரண்டு கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களும் சற்று உயர்வான விலையில்வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Pixel 6 and Pixel 6 Pro with 50 Mega Pixel Camera Launching in India on October 19 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X