Home
Mobile

பிக்சல் 5 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 அறிமுகமா?- இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

பிக்சல் 5 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

கூகிள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்

கூகிள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்

கூகிள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் பிக்சல் 4 ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வில் பிக்சல் 4 ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக நிறுவனம் அறிவித்தது. பிக்சல் 5 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், இந்த சாதனம் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று சில தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

செப்டம்பர் 25 ஆம் தேதி

செப்டம்பர் 25 ஆம் தேதி

பிக்சல் 5 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி ஜெர்மனியில் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலோ அல்லது குறுகிய காலத்திலோ வெளியாகும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் சாதனத்தின் வெளியீட்டு தேதியை கூகிள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4,000 எம்ஏஎச் பேட்டரி

4,000 எம்ஏஎச் பேட்டரி

கூகிள் பிக்சல் 5 ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. முந்தைய தகவல்களின்படி, பிக்சல் 5 விலை பிக்சல் 4 க்கு ஒத்ததாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி

கூகிள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்சேமிப்பு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய கசிந்த தகவல்களின்படி, பிக்சல் 5 ஸ்மார்ட்போனின் திரை 5.8 அங்குல அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிக்சல் 4 ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்

பிக்சல் 4 ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலிக்கு பதிலாக பிக்சல் 5 ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 768 ஜி SoC இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், சாதனம் பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். பிக்சல் 5 உடன் பிளாக் கலர் வேரியண்டிலும் பிக்சல் 4 ஏ 5 ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வந்துள்ளன. பிக்சல் 4 ஏ 5 ஜி ஸ்மார்ட்போனின் வெள்ளை வண்ண மாறுபாடு அக்டோபரில் சந்தையில் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 11 ஐ

ஆண்ட்ராய்டு 11 ஐ

பிக்சல் 4 ஏ 4 ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும். புதிய பிக்சல் தொடர் எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கூகிள் ஆண்ட்ராய்டு 11 ஐ அறிமுகப்படுத்தவும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Pixel 5 May Launching on September 25: Here the Expected Features!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X