Google ஆண்டவரே இது நியாயமா.. Pixel 11 விலை இவ்ளோவா.. Apple ஓனர் கூட வாங்க யோசிப்பாரே!
பிக்சல் 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை காணவுள்ள மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வானது ஆகஸ்ட் 12 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேகத்தில், இந்த சீரிஸின் கீழ் வரும் புதிய கூகுள் போன்களின் விலை விவரங்கள், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளன
இந்த சீரிஸில் கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11), கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro), கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்ட் (Google Pixel 11 Pro Fold) ஆகிய நான்கு மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் டிப்ஸ்டர் BillBil-Kun மற்றும் Dealabs ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின்படி, ஐரோப்பாவில் சில பிக்சல் 11 மாடல்களின் விலையை கூகுள் அதிகரிக்கக்கூடும். அதேவேளையில், இந்த சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களிலிருந்தும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் நீக்கப்படலாம். சரி கூகுள் பிக்சல் 11 சீரீஸ் லீக் ஆன விலை விவரங்களை பார்ப்போம்:
கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் 256GB மாடல் EUR 999 (சுமார் ரூ.1.08 லட்சம்) விலையில் தொடங்கலாம். இது பிக்சல் 10 மாடலின் 128GB மாடலின் அறிமுக விலையான EUR 899-ஐ விட அதிகமாகும். மேலும், இந்த போன் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம் என்றும், அதன் விலை EUR 1,129 (சுமார் ரூ.1.23 லட்சம்) ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 11 ப்ரோ மாடலின் விலை கடந்த ஆண்டின் விலையிலேயே தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதன் 256GB மாடல் EUR 1,199 (சுமார் ரூ.1.3 லட்சம்) என்கிற விலையில் தொடங்கலாம். அதேசமயம், இதன் 512GB மற்றும் 1TB மாடல்களின் விலை முறையே EUR 1,329 (சுமார் ரூ.1.45 லட்சம்) மற்றும் EUR 1,589 (சுமார் ரூ.1.73 லட்சம்) ஆக இருக்கலாம்.
ஆனால், பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் விலை, அதன் முந்தைய மாடலை விட EUR 100 அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் 256GB மாடல் EUR 1,399 (சுமார் ரூ.1.52 லட்சம்) என்கிற விலையில் தொடங்கலாம்; 512GB மற்றும் 1TB மாடல்களின் விலை முறையே EUR 1,529 (சுமார் ரூ.1.66 லட்சம்) மற்றும் EUR 1,789 (சுமார் ரூ.1.95 லட்சம்) ஆக இருக்கலாம்.
கூகுளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 11 ப்ரோ போல்ட் மாடலின் விலையும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆன தகவல்களின்படி, 256GB மாடலின் ஆரம்ப விலை 1,999 யூரோக்களாகவும் (சுமார் ரூ.2.17 லட்சம்), 512GB மாடலின் விலை 2,129 யூரோக்களாகவும் (சுமார் ரூ.2.3 லட்சம்) மற்றும் 1TB மாடலின் விலை 2,389 யூரோக்களாகவும் (சுமார் ரூ.2.6 லட்சம்) இருக்கும் என்று தெரியவருகிறது.
முன்னரே குறிப்பிட்டப்படி, பிக்சல் 11 சீரிஸில் 128GB பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனமும் ஐபோன் 17 சீரீஸில் இதேபோன்ற உத்தியை கையாண்டது; விலை உயர்வை நியாயப்படுத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் (OEMs) பின்பற்றும் ஒரு புதிய உத்தியாக இது மாறிவருவதாக தெரிகிறது.
கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, பிக்சல் 11 மாடலானது Fuchsia, Light Sterling, Midnight Haze மற்றும் Moss ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் என்று லீக் ஆன தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோஎக்ஸ்எல் ஆகியவைகள் Dune, Light Fog, Midnight Haze மற்றும் Pine ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கலாம்
கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் மாடலானது Midnight Haze மற்றும் Pine வண்ணங்களிலும் கிடைக்கக்கூடும். பிக்சல் 11 சீரீஸில் வரும் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட மாடல்கள் Midnight Haze கலர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒட்டுமொத்தமாக - அதிக பேஸிக் ஸ்டோரேஜ் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விலையை இணைப்பதன் மூலம், கூகுள் நிறுவனம் பிக்சல் 11 சீரீஸை பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்த முயல்வதாக தெரிகிறது. இந்த சீரீஸ் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பிளாக்ஷிப் போன்களுடன் போட்டியிடும் அதேவேளையில், பிக்சல் ப்ரோ ஃபோல்ட் மாடலானது சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 8 . இஸட் போல்ட் 8 அல்ட்ரா, ஹானர் மேஜிக் வி6, விவோ எக்ஸ் போல்ட் 6 மற்றும் ஒப்போ பைண்ட் என்6 போன்ற போல்டபிள் போன்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications