Home
Mobile

பட்டையை கிளப்பிய Google.. மிட்-ரேன்ஜ் மார்க்கெட்ல புயல் மாதிரி ஒரு புது Pixel போன்.. Flipkart விற்பனை உறுதி!

இந்தியாவில் கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை பிக்சல் ஸ்மார்ட்போனின் விற்பனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 10ஏ (Pixel 10a) ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் என்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

இதற்கிடையில் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் - கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டிற்கான ஒரு பிரத்யேக மைக்ரோசைட் நேரலைக்கு வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிட்-ரேன்ஜ் மார்க்கெட்ல புயல் மாதிரி ஒரு புது Pixel போன்!

இதன் மூலம் பிப்ரவரி 18 முதல் பிளிப்கார்ட் மற்றும் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்ய கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக லீக் ஆன பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் லீக்டு ரெண்டர்கள், இது மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் உலகளவில் விற்பனைக்கு வரக்கூடும் என்று பரிந்துரைக்கின்றன.

இதற்கிடையில் நேரலைக்கு வந்த பிளிப்கார்ட் மைக்ரோசைட் வழியாக கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ கலரில் காட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக இது பிளாட் ஆன மெட்டல் பிரேம் மற்றும் டூயல் ரியர் கேமரா செட்டப் யூனிட் உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் ஒரு பவர் பட்டன் மற்றும் சவுண்ட் கண்ட்ரோல்கள் உள்ளன

விலையை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,000 க்கு (அமெரிக்க விலை) செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரூ.50,000-ஐ ஒட்டிய பட்ஜெட்டில் தொடங்கலாம்.

கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 119.7-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர்கொண்ட 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவு
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
Pixel 10a Pre Orders Starts in India From February 18 via Flipkart Google India online Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X