1 வருஷம் FREE.. Google Pixel 10 சீரிஸ் போன்களை வாங்குபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்!
கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரிஸ் (Pixel 10 Series) ஸ்மார்ட்போன்களை வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் (Made by Google Event on Aug 20) அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, முழு பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் மற்றும் வெளியீட்டு சலுகைகள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது
கூகுள் பிக்சல் 10 சீரீஸின் கீழ் பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) என மொத்தம் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், இவைகள் கூகுளின் டென்சர் ஜி 5 சிப்செட்களால் இயக்கப்படும் என்றும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் 10 சீரிஸின் வெளியீட்டு விலை நிர்ணயம் ஆனது பழைய பிக்சல் 9 சீரிஸின் விலையைப் போலவே இருக்கும். பழைய 9 சீரீஸிற்கும், புதிய 10 சீரீஸிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் - பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலில் 128ஜிபி ஆப்ஷன் இல்லாமல் போகலாம்; மாறாக பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 256ஜிபி ஆக இருக்கலாம்.
லீக் ஆன விலை விவரங்களை பொறுத்தவரை, அமெரிக்காவில் பேஸிக் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.70,000 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.78,800 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கனடாவில், இந்த வகைகளின் விலைகள் முறையே சுமார் ரூ.69,700 மற்றும் சுமார் ரூ.77,900 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 10 ப்ரோவின் (128ஜிபி) ஆரம்ப விலை அமெரிக்காவில் தோராயமாக ரூ.87,500 ஆகவும் மற்றும் கனடாவில் சுமார் ரூ.85,500 ஆகவும் இருக்கலாம். இது 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி வேரியண்ட்களிலும் அறிமுகமாகும். இவைகளின் விலை அமெரிக்காவில் முறையே தோராயமாக ரூ.96,300, ரூ.1,13,800 மற்றும் ரூ.1,26,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில், இதே வகைகளின் விலை சுமார் ரூ.93,800, ரூ.1,06,500 மற்றும் ரூ.1,23,600 ஆக இருக்கலாம்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்லின் 256ஜிபி ஆப்ஷன் அமெரிக்காவில் தோராயமாக ரூ.1,05,000 க்கும் கனடாவில் சுமார் ரூ.1,03,300) க்கும் அறிமுகம்ஸ் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் (அமெரிக்கா அலல்து கனடாவில்) முறையே ரூ.1,15,600 அல்லது ரூ.1,14,100 மற்றும் ரூ.1,35,700 அல்லது ரூ.1,33,100 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஆப்ஷன் அமெரிக்காவில் தோராயமாக ரூ.1,57,600 க்கும் மற்றும் கனடாவில் சுமார் ரூ.1,52,100 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். 512ஜிபி மற்றும் 1டிபி வகைகளின் விலை அமெரிக்காவில் முறையே ரூ.1,68,100 மற்றும் ரூ.2,11,900 ஆகவும், கனடாவில் ரூ.1,62,900 மற்றும் ரூ.1,81,900 ஆகவும் இருக்கலாம்.
ஆன்லைனில் லீக் ஆன விவரங்கள் அடிப்படையில் அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) திட்டத்தின் ஆறு மாத சந்தாவை இலவசமாக பெறுவார்கள். இதன்கீழ் ஜெமினை மேம்பட்ட அம்சங்கள் மற்றும் 2டிபி கூகுள் ஒன் ஸ்டோரேஜ் ஆகியவைகள் கிடைக்கும்
இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ அல்லது கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அல்லது கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள், கூகுள் ஏஐ ப்ரோவிற்கான முழு வருட சந்தாவையும் பெறுவார்கள். கூடுதலாக, அனைத்து பிக்சல் 10 சீரீஸை வாங்குபவர்களும் 6 மாத காலத்திற்கான ஃபிட்பிட் பிரீமியத்தையும்,3 மாத கால யூட்யூப் பிரீமியத்தையும் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








