வரவிருக்கும் ஐபோன்8 மெட்டல் ஃப்ரேம் படங்கள் கசிந்தது.!
ஐபோன் 8 பொருத்தவரை 5.8-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே.!
ஐபோன் மெட்டல் ஃப்ரேம் தற்போது வலைதளத்தில் அதிகமாக பரவியுள்ளது, மேலும் இந்த மொபைல்மாடல் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, இந்த மெட்டல் ஃப்ரேம் தனித்தன்மை பெற்றது மற்றும் பல்வேறு நுனுக்கங்கள் இந்த ஐபோன்8 மாடலில் இடம்பெற்றுள்ளது.

இந்த பளபளப்பான மெட்டல் ஃப்ரேம் முந்தைய ஃப்ரேம்களில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது, அதன்பின் தனிக்குழுமம் கொண்டு இந்த வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்7எஸ், ஐபோன்7எஸ் பிளஸ், ஐபோன் 8 என மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவை 4.7-இன்ச் மற்றும் 5.5-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஐபோன் 8 பொருத்தவரை 5.8-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்8 தற்போது அருமையான செயல்திறமையுடன் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, அதேபோல் ஐபோன் 8 இதைவிட அதிகமான செயல்திறமையுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்8 கேமரா பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது, அதேபோல் ஐபோன் 8 மொபைல்போன் கேமரா பொறுத்தமட்டில் பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications