எச்டிசி நியூ ஒன் எக்ஸ்+ போனின் படங்கள் கசிவு
oi
-Karthikeyan
By Karthikeyan

எச்டிசி நிறுவனம் வெகு விரைவில் ஒரு புதிய போனை களமிறக்க இருக்கிறது. நியூ ஒன் எக்ஸ்+ என்று அழைக்கப்படும் இந்த போனைப் பற்றி ஏற்கனவே பல வதந்திகள் இணைய தளங்களில் வந்திருக்கின்றன. அதனால் உலக அளவில் மக்கள் மத்தியில் இந்த போனைப் பற்றி ஒரு பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் ஈவ்லீக்ஸ் என்பவர் இந்த புதிய போனின் படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டு ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் வெறியிட்டிருக்கும் படங்களில் பார்த்தால் இந்த புதிய போன் ஏற்கனவே எச்டிசி களமிறக்கிய எச்டிசி ஒன் போனை ஒத்திருக்கிறது. ஆனால் இதன் தொழில் நுட்ப வசதிகள் சூப்பராக இருக்கின்றன.
அதாவது இந்த நியூ ஒன் எக்ஸ்+ புதிய போன், டேக்ரா 3+ க்வாட் கோர் 1.6 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், நீடித்த இயங்கு நேரம் வழங்கும் அட்டகாசமான பேட்டரி, 1ஜிபி ரேம், 32ஜிபி சேமிப்பு மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 இயங்கு தளம் ஆகிய தொழில் நுட்ப வசதிகளுடன் வருவதால் இந்த போன் கண்டிப்பாக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த போன் மிக விரைவில் அமெரிக்க சந்தையில் களம் இறங்கிவிடும் என்று நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications