ஐபோன் 8, 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ் : இந்திய விலை நிர்ணயம், வெளியீடு மற்றும் அம்சங்கள்.!

அதே நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் ஒன்றை காட்சிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

|

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 சாதனமானது வருகிற செப்டம்பர் 12 அன்று ஐபோன் 7 எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் ப்ளஸ் சாதனத்துடன் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐபோன் 8, 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ் : இந்திய விலை நிர்ணயம், வெளியீடு.!

அறிமுக விழாவில் ஐபோன் 8 மட்டுமின்றி முன் எப்போதும் காணாத தனித்துவமான மற்றும் சிறந்த வடிவமைப்பில் ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் ப்ளஸ் சாதனங்களும் அறிமுகமாகவுள்ளன. அதே நேரத்தில், ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் ஒன்றை காட்சிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது, இந்த ஆப்பிள் வாட்ச் ஆனது செல்லுலார் கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 8 அம்சங்கள்

ஐபோன் 8 அம்சங்கள்

ஐபோன் 8-ல் ஒரு பெரிய மறுவடிவமைப்பு கொண்டு வரப்படுகிறது. பழைய மற்றும் பிரபலமான ஆப்பிள் ஐபோன் 4-ன் வடிவமைப்பிற்கு ஐபோன் 8 திரும்பும் என்றும் வதந்திகள் உள்ளன. அதாவது, ஐபோன் 8-ன் முன் மற்றும் பின் பக்கம் கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம். மற்றும் சாதனம் ஒரு உலோக சட்டகம் கொண்டிருக்கலாம்.

விர்ச்சுவல் ஹோம் பொத்தான்

விர்ச்சுவல் ஹோம் பொத்தான்

ஐபோன் 8-ன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான ஹோம் பொத்தானை ஐபோன் 8 கொண்டிருக்காது. அதற்கு பதிலாக திரையின் கண்ணாடி கவரின் கீழ் ஒரு விர்ச்சுவல் பொத்தான் கொண்டு வரும். கருவியின் கைரேகை சென்சாரை பொறுத்தமட்டில் பின்பக்கம் உள்ள ஆப்பிள் லோகோவிற்கு அது நகர்த்தப்படுகிறது. அதாவது கூகுள் பிக்சல் தொலைபேசிகளில் ஏற்கனவே உள்ளதைப் போலவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓஎல்இடி டிஸ்பிளே

ஓஎல்இடி டிஸ்பிளே

ஐபோன்களில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரும் நோக்கில் இந்த ஐபோன் 8 ஆனது ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டு வெளியாகிறது. உடன் மிகவும் மெல்லிய பெஸல்கள் கொண்டு வெளியாகும் என்பது உறுதி. ஆனால், ​​திரையின் நிச்சயமான அளவு தெரியவில்லை. இருப்பினும் ஐபோன் 5 பிளஸ்-ல் பயன்படுத்தியுள்ள 5.5 இன்ச் டிஸ்ப்ளேவை விட பெரிதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

ஐபோன் 8 மேம்பட்ட கேமராக்கள் கொண்டு வருகிறது. வெளியான வதந்திகள் உண்மையானால், ஐபோன் 8 ஆனது ஐபோன் 7 பிளஸ்-இல் உள்ளதைப் போலவே இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்கும். ஒரு சென்சார் வழக்கமான லென்ஸை பயன்படுத்தும் அதேசமயம் மற்றொரு சென்சார் ஸூம் புகைப்படம் மற்றும் போர்ட்ரெய்ட் மோட் போன்ற அம்சங்களை செயல்படுத்தும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்க வேண்டும்.

3டி பேஸ் ரிக்கனைசேஷன்

3டி பேஸ் ரிக்கனைசேஷன்

வெளியாகும் ஐபோன் 8 ஆனது சாதனத்தை அன்லாக் செய்ய பயன்படும் 3டி பேஸ் ரிக்கனைசேஷன் (3D face recognition) அம்சம் கொண்டு வெளியாக வாய்ப்புகள் அதிகம். ஐஓஎஸ் 11 கொண்டு இயங்கும் இக்கருவி வயர்லெஸ் சார்ஜ் அம்சம் கொண்டிருக்கலாம் மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் குறைந்தது 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல்ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல்

ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல்ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல்

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ஐபோன் 8 சுமார் 1000 டாலர்கள் என்ற புள்ளியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல் அல்லது அதற்கும் மேலாக இருக்கலாம். செப்டம்பர் 23-க்குப் பிறகு, ஐபோன் 8 விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விற்பனையானது வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் தொடக்கத்தில் நிகழலாம்.

ஐபோன் 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ்அம்சங்கள்

ஐபோன் 7எஸ் மற்றும் 7எஸ் ப்ளஸ்அம்சங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7எஸ் ஐபோன் 7எஸ் ப்ளஸ் சாதனங்களில் சில வன்பொருள் மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். உதாரணமாக சிறந்த கேமராக்கள் (ஆனால் அவை ஏற்கனவே இருக்கும் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் போன்ற வடிவமைப்பில் தான் இருக்கும்) மற்றும் திரை அளவில் மாற்றம் ஆகியவைகளை எதிர்பார்க்கலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐபோன் 7எஸ் ஆனது 4.7 அங்குல திரையில் வரும், மறுகையில் உள்ள ஐபோன் 7எஸ் ப்ளஸ் ஆனது ஒரு 5.5 அங்குல திரை கொண்டு வெளியாக வேண்டும்.

சுமார் ரூ. 70,000/-

சுமார் ரூ. 70,000/-

இந்த இரு தொலைபேசிகளுமே ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் அறிமுக விலைபுள்ளியில் சந்தையை எட்டலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் ப்ளஸ் ஆனது ஒவ்வொரு இரண்டாவது ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் வழங்கும் எஸ் மேம்படுத்தலை பெறும் மற்றும் இந்தியாவில், ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் ப்ளஸ் ஆனது சுமார் ரூ. 70,000/- என்ற விலைபுள்ளியை கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
iPhone 8, iPhone 7s and iPhone 7s Plus to launch on September 12, Apple confirms launch event. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X