Home
Mobile

20 மணி நேர டாக் டைம் கொடுக்கும் பிலிப்ஸ் மொபைல்!

By Super
20 மணி நேர டாக் டைம் கொடுக்கும் பிலிப்ஸ் மொபைல்!

எலக்ட்ரானிக் சாதன உலகில் மக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் பிலிப்ஸ் நிறுவனம் இன்னும் அந்த நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் ஏராளமான எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுத்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக மொபைல் துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறது பிலிப்ஸ்.

இந்த நிலையில், எக்ஸ்-622 என்ற பெயரில் புதிய மொபைலை உருவாக்கியிருக்கிறது இந்நிறுவனம். இந்த மொபைல் 3.2 இஞ்ச் டிஎப்டி திரையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் பார்ப்பதற்கு பளிச்சிடும் தோற்றத்தை கொண்டிருக்கிறது.

பிலிப்ஸ் எக்ஸ்-622 மொபைல் டியூவல் சிம் பொருத்தும் வசதியினை கொண்டுள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அதிக பட்சம் 2592 X 1944 திரை துல்லியத்துடன் புகைப்படங்களை எடுக்கலாம். இதனால் அழகான புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

எக்ஸ்-622 மொபைலில் 44எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியை அளிக்கும். ஜிபிஆர்எஸ், வைபை, எட்ஜ் தொழில் நுட்பம் போன்ற தகவல் தொடர்பு வசதிகளையும் இது சப்போர்ட் செய்கிறது.

புளூடூத் 2.1 வெர்ஷன் வசதியின் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் வழக்கமாக எதிர் பார்க்ககும் எப்எம் ரேடியோ, மீடியா ப்ளேயர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற முடியும்.

ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 2,100 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டுள்ளது. அனைவரையும் திகைக்க வைக்கும் அளவு டாக் டைம் கொடுக்கிறது இந்த மொபைல். 20 மணி நேரம் டாக் டைம் மற்றும் 1,800 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் அளிக்கிறது.

இத்தகைய ஆற்றல் மிகுந்த பேட்டரியினை கொடுக்கும் இந்த ஃபிலிப்ஸ் எக்ஸ்-622 மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த மொபைல் பேட்டரியின் ஆற்றல் நிச்சயம் வாடிக்கையாளர்களால் பேசப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X