Home
Mobile

Philips ஒரே போடு.. பட்ஜெட்ல 64MP கேமரா.. 5700mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் முதல் ஸ்மார்ட்போன் மாடலை பிலிப்ஸ் நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இந்த பிலிப்ஸ் எஸ்7221 (Philips S7221) மாடலில் 64 எம்பி கேமரா, 5700mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம் உள்ளிட்ட பீச்சர்கள் பட்ஜெட்டில் கிடைக்கின்றன. முழு பீச்சர்கள் எப்படி இருக்கின்றன? விலை மற்றும் விற்பனை எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பிலிப்ஸ் என்றாலே டிவி மாடல்கள் நினைவுக்கு வரும். அதேபோல பல்ப் மாடல்களுக்கும் பிலிப்ஸ் நிறுவனம் பெயர் பெற்றதாகும். இப்போது, ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் பிலிப்ஸ் எஸ்7221 ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது.

Philips ஒரே போடு.. பட்ஜெட்ல 64MP கேமரா.. 5700mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிலிப்ஸ் எஸ்7221 அம்சங்கள் (Philips S7221 Specifications): 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த பிலிப்ஸ் எஸ்7221 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டி பிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக வெளியாகி இருக்கிறது.

ஆக்டா கோர் ஸ்ப்ரெட்ரம் டி765 (Octa Core Spreadtrum T765) சிப்செட்டை இந்த பிலிப்ஸ் எஸ்7221 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. மீடியாடெக், ஸ்னாப்டிராகன் அல்லது யுனிசோக் சிப்செட் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ப்ரெட்ரம் கிடைத்துள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

64 எம்பி மெயின் கேமரா + பிடிபிஎப் (PDAF) போகஸ் கிடைக்கிறது. சிஎம்ஓஎஸ் (CMOS) இமேஜ் சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமராவை இந்த பிலிப்ஸ் எஸ்7221 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதில் ஃபிக்சடு போகஸ் கிடைக்கிறது. ஏஐ சீன் ஆப்டிமைசேஷன் (AI Scene Optimisation) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைத்து இருக்கின்றன. அல்ட்ரா மேக்ஸ் மோட் (Ultra Max Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் புரொடெக்சன் (Dust & Splash Protection) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5700mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பேட்டரியுடன் 8.95 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. மொத்தமாக 200 கிராம் எடை கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது.

பிலிப்ஸ் எஸ்7221 விலை (Philips S7221 Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,499ஆகவும் இருக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் கிரே (Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Philips S7221 5G With 64MP Camera 8GB RAM Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X