Home
Mobile

வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. செப்டம்பர் 2-ல் களமிறங்கும் Philips 5ஜி போன்.. 64எம்பி கேமரா.. எந்த மாடல்?

பிலிப்ஸ் (Philips) நிறுவனம் இந்தியாவில் புதிய பிலிப்ஸ் எஸ்7221 5ஜி (Philips S7221 5G) ஸ்மார்ட்போனை நாளை (செப்டம்பர் 2) அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிலிப்ஸ் எஸ்7221 5ஜி அம்சங்கள் (Philips S7221 5G Specifications): புதிய பிலிப்ஸ் எஸ்7221 5ஜி மாடல் 6.67-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளியாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

செப்டம்பர் 2-ல் களமிறங்கும் Philips 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ஆக்டா கோர் யுனிசாக் டி765 (Unisoc T765) சிப்செட் உடன் இந்த பிலிப்ஸ் எஸ்7221 5ஜி மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 64எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது பிலிப்ஸ் எஸ்7221 5ஜி மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த புதிய போனில் உள்ளன.

அதுவும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) உடன் பிலிப்ஸ் எஸ்7221 5ஜி போன் வெளியாகும். அதேபோல் இந்த போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த புதிய பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) பிலிப்ஸ் எஸ்7221 5ஜி மாடலில் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும்.

செப்டம்பர் 2-ல் களமிறங்கும் Philips 5ஜி போன்.. எந்த மாடல்?

பிலிப்ஸ் எஸ்7221 5ஜி மாடல் 5700எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் பிலிப்ஸ் எஸ்7221 5ஜி மாடலில் உள்ளன. அதேபோல் பிளாக், ஒயிட், சில்வர் நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய பிலிப்ஸ் போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Philips S7221 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X