புதிய டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்துகிறது பிலிப்ஸ்

By Super
|
புதிய டியூவல் சிம் மொபைலை அறிமுகப்படுத்துகிறது பிலிப்ஸ்
ஃபிலிப்ஸ் நிறுவனத்தின் ஆர்வம் இப்பொழுது இந்திய சந்தையின் பக்கம் திரும்பியிருக்கிறது. நுணுக்கமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடையே நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது ஃபிலிப்ஸ் நிறுவனம்.

இத்தகைய வெற்றியைக்கண்ட இந்நிறுவனம் தற்போது ஸெனியம் எக்ஸ்-806 என்ற புதிய மொபைல்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த மாடல் டியூவல் சிம் வசதி கொண்டது. ரஷ்யாவிலும், யூரோப்பிலும் அதிக விற்பனையைத் கடந்து மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

நீடித்து உழைக்கும் பேட்டரி வசதிக்காகப் பிற நாடுகளில் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் முக்கியமாக இதன் டியூவல் சிம் வசதிக்காகவே வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுறது.

3.0 இன்ச் திரை வசதியைக் கொண்டது.240 X 400 ரிசல்யூஷனையும்,155 பிபிஐ பிக்சல் வசதியையும் பெற்றுள்ளது. 5 மெகா பிக்சல் கேமிரா வசதியையும் கொண்டுள்ளது. 2560 X 1920 பிக்சலுடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபளாஷிற்கு சப்போர்ட் செய்கிறது.

இதில் செகன்டரி கேமிரா வசதி இல்லை. இதனுடைய கேமிராவில் ஃபேஸ் டிடெக்ஷன்,ரெட் அய் ரிடெகஷன் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. எட்ஜ் தொழில் நுட்பத்துடன் 10 ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.2.0 வெர்ஷன் புளூடூத் மற்றும் A2DP தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சின்க்ரோனைஸ் செய்வதற்காக மினி யூஎஸ்பி 2.0 வசதி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மீடியாப் பிளேயர் மூலமாக எம்பி3,டபல்யூஏவி,டபல்யூஎம்ஏ,எம்பி4டபிள்யூஏவி,போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாய்ஸ் மெமோ வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாடலில் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. மைக்ரோஎஸ்டி வசதியின் மூலம் 8 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

இதனுடைய ஸ்டேன்ட்பை டைம் 720 மமி நேரம் ஆகும்.மற்றும் 8 மணி நேரம் டாக் டைம் அளிக்கிறது.இந்த போனில் தொடர்ந்து 70 மணி நேரம் ம்யூசிக் ப்ளே செய்ய முடியும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.ஆனால் ரூ.10,000 விலையில் இந்த போன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X