புதிதாக 6 டச் ஸ்கிரீன் போன்கள்: பிலிப்ஸ் அறிமுகம்

Posted By: Staff

புதிதாக 6 டச் ஸ்கிரீன் போன்கள்: பிலிப்ஸ் அறிமுகம்
மொபைல் உலகம் நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகின்றது.புதிது புதிதாக தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அளவில் பெரிதாக இருந்த மொபைல் போன்கள் தற்போது சிறிய வடிவுக்கு உருமாறியிருக்கின்றன.

அந்த சிறிய வடிவிலும் டச் ஸ்கிரீன் மாடல்கள் நுழைந்து விட்டன. மல்டி டச் ஸ்மார்ட் மொபைல்களும் வந்துவிட்டன.

ஃபிலிப்ஸ் நிறுவனம் எதிர்பாராத விதமாகத் தனது வேகத்தை இழந்திருந்தது. ஆனால் இப்போது போட்டிக்களத்தில் இறங்கியுள்ளது. அதுவும் 6 டச் ஸ்கீரின் மொபைல்போன் மாடல்களுடன் போட்டிக்குத் தயாராகி உள்ளது.

ஃபிலிப்ஸினுடைய புதிய டச் ஸ்கிரீன் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறைய பலன்களைத் தரும் வகையில் இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்ப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரப்போவதாகத் தெரிய வந்துள்ளது.இதில் நீடித்து உழைக்கும் பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாடல்களில் இரண்டு மாடல்கள் டியூவல் சிம் வசதி கொண்டது. இதில் மீதம் உள்ள நான்கு மாடல்களும் நீடித்து உழைக்கும் பேட்டரி வசதி கொண்ட பார் போன்ஸ் மாடல்களாகும்.

எக்ஸ்-806 பிளாக் மற்றும் எக்ஸ்-518 என்ற இரண்ட மாடல்களும் டியூவல் போன்களாகும். எக்ஸ்-806 மாடல் எல்இடி ப்ளாஷ் வசதி கொண்டது.5 பிக்செல் கேமராவுடன் ஆட்டோ ஃபோகஸ் வசதி கொண்டது.

மற்றும் 3 இன்ச் திரை வசதி கொண்டுள்ளது.1530 எம்ஏஹெச் லித்தியம் அயான் பேட்டரி வசதி கொண்டது.

70 மணி நேரம் மியூசிக் ப்ளே செய்ய பயன்படுகின்றது. எக்ஸ்-518 பிளாக் 2.8 இன்ச் திரை வசதியைக் கொண்டுள்ளது. எக்ஸ்-806 மாடலைக் காட்டிலும் எக்ஸ்-518 மாடல் சிறிய திரையைக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த டச் ஸ்கிரீன் மாடல் அனைவரையும் கவர்கின்ற வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த எக்ஸ்-518 மாடல் 2 மெகாப் பிக்ஸல் லென்ஸ் வசதி கொண்டுள்ளது.இந்த இரண்டு மாடல்களிலுமே மெமரிக் கார்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒளி ஏற்படுத்தாமல் படம் பிடிக்கக் கூடிய வசதியும் உள்ளது. எக்ஸ்-806 மாடல் 12 மணி நேரம் ஃபுல் டாக் டைம் கொடுக்கிறது. இதில் சீனியம் என்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபிலிப்ஸ் மாடல் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்குமோ அந்த அளவுக்கு இதன் விலையும் அதிசயிக்கக் கூடிய வகையில் நிச்சயம் இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot