'பெரிய்ய்ய' திரையுடன் பிலிப்ஸ் ஸ்மார்ட்போன்!

By Super
|
'பெரிய்ய்ய' திரையுடன் பிலிப்ஸ் ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் மார்க்கெட்டில் பிலிப்ஸ் நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இதனால், பழைய படி தனது மின்னணு சாதன தயாரிப்பில் கவனத்தை திருப்பியது. ஆனால், தற்போது வெகு வேகமாக வளர்ந்து வரும் மொபைல்போன் மார்க்கெட்டில் பெயர் ஊர் தெரியாத நிறுவனங்களெல்லாம் நம்பிக்கையுடன் களமிறக்கி வருவதால் பிலிப்ஸ் நிறுவனமும் தற்போது மொபைல்போன் மார்க்கெட்டில் கவனத்தை திருப்பியுள்ளது.

டபிள்யூ920 என்ற பெயரில் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது பிலிப்ஸ். இந்த புதிய ஸ்மார்ட்போன் 4.1 இஞ்ச் டிஎப்டி திரையுடன் வருகிறது. இரட்டை வண்ணத்தில் அழகுற மிளிரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட மாடல் கண்களை வெகுவாகவே கவர்கிறது.

இதில் எல்இடி பிளாஷ் வசதிகொண்ட 5 மெகாபிக்ஸெல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.இதில், 512 எம்பி ரேம் மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசஸரையும் கொண்டிருக்கிறது. இது 3ஜி நெட்வொர்க்கையும் சப்போர்ட் செய்யும்.

வைஃபை இன்டர்நெட் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் ஜிபிஎஸ் வசதியும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போனை பிலிப்ஸ் விரைவி்ல் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. வாடிக்கையாளர்களின் கையை பிடிக்காத விலையில் இந்த போன் மார்க்கெட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X