நீடித்து உழைக்கும் பேட்டரியுடன் மிளிரும் ஃபிலிப்ஸ் மொபைல்கள்!

By Super
|
நீடித்து உழைக்கும் பேட்டரியுடன் மிளிரும் ஃபிலிப்ஸ் மொபைல்கள்!

நீடித்து உழைக்கும் பேட்டரியுடன் ஸெனியம் வரிசையில் 5 மொபைல்களை வழங்குகிறது ஃபிலிப்ஸ் நிறுவனம்.

வெவ்வேறு தொழில் நுட்பங்களை வழங்கும் இந்த மொபைல்கள், வெவ்வேறு விலையிலும் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஸெனியம் எக்ஸ்-513, எக்ஸ்-116, எக்ஸ்-121, எக்ஸ்-518 மற்றும் எக்ஸ்-523 என்ற பெயர் கொண்ட இந்த மொபைல்களின் தொழில் நுட்ப வசதியினையும் பார்ப்போம்.

எக்ஸ்-513, எக்ஸ்-116 மற்றும் எக்ஸ்-121 என்ற இந்த மொபைல்கள் சிறப்பான கேமராவினை கொண்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த மொபைல்களில் மிக முக்கியமான வசதி இதன் பேட்டரி தான்.

இந்த மூன்று மொபைல்களும் 60 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் எளிதாக கொடுக்கும். இதனால் பேட்டரி பற்றிய கவலை இந்த மொபைல்களை பொருத்த வரையில் இல்லை.

ஸெனியம் எக்ஸ்-518 மொபைல் 2.8 இஞ்ச் திரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும். 2 மெகா பிக்ஸல் கேமராவில் தேவையான துல்லியத்தில் புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இந்த மொபைலில் 12 மணி நேரம் டாக் டைம் மற்றும் 40 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

எக்ஸ்-518 மொபைலை விட எக்ஸ்-523 மொபைல், சற்று அதிகமான கேமரா வசதியினை கொண்டது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவில் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம்.

எக்ஸ்-513, எக்ஸ்-116, எக்ஸ்-121 என்ற இந்த மூன்று மொபைல்களில் ரூ. 2,000 விலையில் இருந்து ரூ. 5,000 விலை வரையில் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X