3ஜி வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன்கள்: பிலிப்ஸ் ஆயத்தம்

Posted By: Staff

3ஜி வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன்கள்: பிலிப்ஸ் ஆயத்தம்
பல தடவை வெற்றிப்படிகளைத் தொட்ட பிலிப்ஸ் நிறுவனம் புதிதாக இரண்டு ஸ்மார்ட் மொபைல்களைக் களமிறக்க இருக்கிறது. பிலிபிஸ் எக்ஸ்-726, பிலிப்ஸ் எக்ஸ்-9320 என்ற 3ஜி வசதி கொண்ட இந்த புதிய ஸ்மார்ட் மொபைல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது பிலிப்ஸ்.

இந்த இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் மூலம் இயங்கக் கூடிய மொபைல். இதற்கு முன்பு பிலிப்ஸ் நிறுவனம் செனியம் என்ற பிரான்ட் மொபைலை அறிமுகம் செய்தது. 5 புதுய எடிஷன்களையும் அறிமுகம் செய்தது.

டியூவல் சிம் வசதி, 3 இஞ்ச் டச் ஸ்கிரீன், 5 மெகா பிக்ஸல் கேமரா போன்ற வசதிகளையும் அது வழங்கியது. வாடிக்கையாளர்களுக்கு பிடித்த மொபைல்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டது. அந்த வகையில் இந்த முறையும் பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களின் பெரும் பாராட்டுதல்களைப் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கு அறிமுகமாக உள்ள பிலிப்ஸ் எக்ஸ்-726 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இந்த வசதி மக்களுக்கு மிகுந்த ஆர்வத்தை அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் தொழில் நுட்பம் கொண்டது.

இதில் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 40 நாட்கள் ஸ்டான்-பை டைமும் மற்றும் 15 மணி நேரம் டாக் டைமும் எளிதாக வழங்க முடியும். இது எப்எம் ரேடியோ, புளூடூத் வசதிகளைக் கொண்டது. இந்த மொபைல் 2.1 வெர்ஷன், ஏ2டிபி தொழில் நுட்பம் கொண்டுள்ளது.

இதனுடன் ஜாவா கேம்ஸ் மற்றும் இன்னும் சில அப்ளிக்கேஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய மொபைல்கள் பல அரிய வகை தொழில் நுட்பத்துடன் இந்திய சந்தைக்கு வருகிறது. பிலிப்ஸ் எக்ஸ்-9320 மொபைலும் அந்த அரிய வகை தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த மொபைல் டியூவல் சிம் வசதியும் மற்றும் 4.3 இஞ்ச் கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் வசதியும் கொண்டதாக உள்ளது. இதில் பிரைமரி மற்றும் செகன்டரிக் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த வீடியோ, புகைப்படம், வீடியோ காலிங் ஆப்ஷன் போன்ற வசதிகளையும் பெற முடியும். இந்த இரண்டு மொபைல்களின் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த மொபைல்கள் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot