Home
Mobile

இன்னுமா என்ன தெரியல.. Philips எண்ட்ரிக்கு இந்தியாவே வெயிட்டிங்.. 2 புது மாடல்கள்.. எப்போது வருது?

இந்திய மார்கெட்டில் பிலிப்ஸ் (Philips) பெயரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களிடையே செல்வாக்கு வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் புது ஸ்மார்ட்போன் மற்றும் பீச்சர் போன்களுடன் களமிறங்க இருப்பது உறுதியாகிவிட்டது. இதில் பிலிப்ஸ் ஸ்மார்ட்போனின் (Philips Smartphone) வருகைக்கு மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் காத்திருக்கிறது.

ஜெனோடெல் இந்தியா

கிச்சன் அப்ளையன்ஸ் மற்றும் எலக்ட்ரிக் ஷேவர் மட்டுமல்லாமல், எல்இடி லைட்கள், டிவிகளுக்கு பிலிப்ஸ் நிறுவனம் பெயர் பெற்றதாகும். இந்த நிறுவனத்தின் பிராண்ட் பெயரில் ஜெனோடெல் இந்தியா (Zenotel India) நிறுவனம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, பீச்சர் போன்களின் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன.

இன்னுமா என்ன தெரியல.. Philips எண்ட்ரிக்கு இந்தியாவே வெயிட்டிங்!

இப்போது, பிலிப்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதியாகி, மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி, ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரீமியம் டிசைன், டிரிபிள் ரியர் கேமரா, ஆரா எல்இடி மற்றும் ஸ்பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது.

மேட் பினிஷிங் பாடியில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. கிரே ஷேடில் வெளியாக இருக்கிறது. இந்த டிசைன் மற்றும் கலர் குறித்த விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இந்த போஸ்டரானது, ஜெனோடெல் இந்தியா நிறுவனத்தின் எக்ஸ் தளம், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் போஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல பீச்சர் போனும் வர இருக்கிறது.

இந்த பிலிப்ஸ் ஸ்மார்ட்போனுடன் பீச்சர் போனின் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்த போனும் பார்ப்பதற்கு குவாலிட்டியாக இருக்கிறது. இந்த 2 மாடல்களே இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாக இருப்பதாக ஜெனோடெல் இந்தியா குறிப்பிட்டு இருக்கிறது. மற்ற எந்தவொரு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களையும் அந்த நிறுவனம் உறுதி செய்யவில்லை.

இருப்பினும், 2026ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இவை மார்கெட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக டிசைன் மற்றும் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகலாம். ஆனால், வெளியீடு மற்றும் விற்பனை அடுத்தாண்டு தொடக்கத்தில் இருக்க வாய்ப்புள்ளது. ஜெனோடெல் இந்தியா நிறுவனத்தின் இணைய தள பக்கத்தில் பீச்சர் போன்களின் பெயர்கள் உறுதியாகி இருக்கின்றன.

இதில் பிலிப்ஸ் ஈ2102 (Philips E2102), பிலிப்ஸ் ஈ2103 (Philips E2103), பிலிப்ஸ் ஈ2112 (Philips E2112), பிலிப்ஸ் ஈ2221 (Philips E2221), பிலிப்ஸ் ஈ2101சி (Philips E2101C) மர்றும் பிலிப்ஸ் ஈ2104 (Philips E2104) ஆகிய மாடல்கள் உறுதியாகி இருக்கின்றன. அதேபோல பிலிப்ஸ் டேப்லெட், பிலிப்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் விரைவில் உறுதி செய்யப்பட இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் பேட் ஏர்

இந்த ஸ்மார்ட்போனுக்கு முன்னதாகவே, பிலிப்ஸ் பேட் ஏர் (Philips Pad Air) மாடலின் பீச்சர்கள் கசிந்துள்ளன. Paras Guglani எக்ஸ் தளத்தில் இந்த பீச்சர்கள் போஸ்ட் செய்யப்பட்டுள்ளன. இதில் 2K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், யுனிசோக் சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி இதில் கிடைக்க இருக்கிறது.

இந்த ஜெனோடெல் இந்தியா நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களை விட பீச்சர் போன்களின் அதிக கவனம் செலுத்த இருப்பது தெரிகிறது. இருப்பினும், பிலிப்ஸ் ஸ்மார்ட்போனின் டிசைன் பலருக்கு பிடித்து இருப்பதால், வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். இதற்கு காரணம், இது பட்ஜெட் விலை மாடலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஏனென்றால், இதே டிசைன் கொடுக்கும்படி மார்கெட்டில் பல மாடல்கள் இருக்கின்றன. ஆகவே, அதற்கு போட்டியாக களமிறக்க வேண்டுமானால், பீச்சர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பட்ஜெட்டும் மலிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இந்திய மார்கெட்டில் நிலைத்து இருக்க முடியாது. இதைத்தான் ஜெனோடெல் இந்தியா பின்பற்ற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Philips Enters India Soon New Smartphone Feature Phone Officially Teased Zenotel India Drops Poster
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X