அடிச்சான் பாரு.. அடுத்தடுத்து 3 Redmi போன்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு.. அதுவும் நிரந்தரமாக!
இந்திய மொபைல் சந்தையில் (Indian Mobile Market) வாங்க கிடைக்கும் 3 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் (Redmi Smartphones) மீது அடுத்தடுத்து விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த 3 ரெட்மி போன்களுமே நிரந்தர விலைக்குறைப்பை (Permanent Price Cut) பெற்றுள்ளன.
நாம் இங்கே பேசுவது ரெட்மி கே50ஐ (Redmi K50i), ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) மற்றும் ரெட்மி 12சி (Redmi 12C) ஆகிய 3 ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். முன்னதாக வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடியின் (Limited Period Discount) கீழ் வாங்க கிடைத்த இந்த 3 போன்களின் மீதும் தற்போது நிரந்தர விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே50ஐ புதிய விலை நிர்ணயம்: இது கடந்த ஆண்டு ரூ.25,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் இந்தியாவில் அறிமுகமானது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.3000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.22,999 முதல் வாங்க கிடைக்கிறது. வங்கி தள்ளுபடி / எக்ஸ்சேஞ்ச் போனஸையும் சேர்த்தால் இதன் விலையை ரூ.18,999 வரை குறைக்க முடியும்.
ரெட்மி கே50ஐ முக்கிய அம்சங்கள்: இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5080mAh பேட்டரி, 64எம்பி + 8எம்பி அல்ட்ராவைடு + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 12 5ஜி புதிய விலை நிர்ணயம்: இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.1000 விலைக்குறைப்பை பெற்று ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் வங்கி தள்ளுபடியை பயன்படுத்தினால் இந்த போனின்விலையை ரூ.14,999 ஆக குறைக்க முடியும்.
ரெட்மி நோட் 12 5ஜி முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட், 48எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 12எம்பி செல்பீ கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 13 போன்றவைகளை கொண்டுள்ளது.
ரெட்மி 12சி புதிய விலை நிர்ணயம்: கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் விலை நிர்ணயம் ரூ.8,999 ஆக இருந்தது, தற்போது ரூ.500 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட 3 ரெட்மி போன்களுமே எம்ஐ.காம் (Mi.com) மற்றும் அமேசான்.இன் (Amazon.in0 வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.
ரெட்மி 12சி முக்கிய அம்சங்கள்: இது 6.71-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட், 50எம்பி மெயின் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம், 64ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மற்றும் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications