Home
Mobile

கேமராவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது!

By Super

கேமராவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது!
அதி நவீன தொழில் நுட்பம் கொண்டதாக வரும் மொபைல்கள் என்று சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் மற்றும் ஏசர் ஐகானியா ஸ்மார்ட் எஸ்-300 ஆகிய ஸ்மார்ட்போன்களை கூறலாம்.

இந்த இரண்டு மொபைல்களிலும் அதிக மெகா பிக்ஸல் திறன் கொண்ட கேமராவுடன் வருகின்றன.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் மொபைல் 4.2 இஞ்ச் டிஎப்டி திரை தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும். ஏசர் ஐகானியா ஸ்மார்ட் எஸ்-300 மொபைல் 4.8 இஞ்ச் மிக பிரம்மாண்ட திரையை கொண்டிருக்கும்.

திரை வசதியை பொருத்த வரையில் எக்ஸ்பீரியா மொபைலை விடவும், ஏசர் ஐகானியா எஸ்-300 மொபைல் பெரிய திரையை கொண்டிருக்கும்.

ஒரு சவுகிரியம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

மெமரி வசதி பற்றிய கவலை தேவையில்லை. எக்ஸ்பீரியா மற்றும் ஏசர் ஐகானியா என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 32 ஜிபி வரை எக்ஸ்பேன்டபில் மெமரி கார்டு ஸ்லாட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் மொபைலில் ஒரு முக்கிய விஷயம் இதில் 8.1 மெகா பிக்ஸல் கேமரா இருப்பது தான். இதன் மூலம் எவ்வளவு துல்லியமான புகைப்படத்தையும் சுலபமாக எடுக்கலாம்.

ஏசர் மொபைலிலும் அற்புதமான கேமரா வசதி உள்ளது. இந்த மொபைலிலும் 8 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2 மெகா பிக்ஸல் கொண்ட செகன்டரி கேமராவும் இதில் உண்டு..

வைபை, யூஎஸ்பி, ஆடியோ, எப்எம் ரேடியோ, இன்டர்நெட் பிரவுசர் போன்ற வசதிகளை இந்த இரண்டு மொபைலிலும் பெறலாம்.

சோனி மொபைலில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 7 மணி நேரம் 35 நிமிடம் டாக் டைம் மற்றும் 460 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

ஏசர் மொபைலில் உள்ள லித்தியம் பேட்டரியின் மூலம் 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் நிறைவான ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

இந்த சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் மொபைல் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏசர் ஐகானியா ஸ்மார்ட் எஸ்-300 என்ற மொபைலின் விலை இன்னும் சரியாகத்

தெரியவரவில்லை.

ஆனால் இந்த இரண்டு உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களுமே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெரும்

என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X