Home
Mobile

ஃபென்ட்டாஸ்டிக் வசதிகளுடன் புதிய பேன்டெக் ஸ்மார்ட்போன்!

By Super
ஃபென்ட்டாஸ்டிக் வசதிகளுடன் புதிய பேன்டெக் ஸ்மார்ட்போன்!

தற்சமயம் நடந்த கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் பர்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்தது பேன்டெக் நிறுவனம். இதை அடுத்து வேகா எல்டிஇ இஎக்ஸ் ஐஎம்-ஏ820-எல் என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது பேன்டெக் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். இது 4.5 அகன்ற சூப்பர் ஐபிஎஸ் தொடுதிரை வசதியை கொண்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 2.3 ஜென்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த வேகா ஸ்மார்ட்போனில் இன்னும் சிறந்த வசதிகளும் உள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் எளிதாக இயங்க, இதன் டியூவல் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை புரியும்.

எந்த தகவல்களை பார்க்க வேண்டும் என்றாலும், திரையின் தெளிவு மிகவும் முக்கியமானது. அகன்ற திரை கொண்ட வேகா எல்டிஇ இஎக்ஸ் ஐஎம்-ஏ820-எல் ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 800 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தை தரும்.

இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா, 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். ஜியோ டேகிங், ஃபேஸ் இன்டெக்ஷன், ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்ற சிறப்பான தொழில் நுட்பங்களையும் கொடுத்து அசத்தும். இதில் செகன்டரி விஜிஏ கேமராவும் உள்ளது.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பதிற்கு துணை புரியும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியையும் பெறலாம்.

வேகா எல்டிஇ இஎக்ஸ் ஐஎம்-ஏ820-எல் ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1830 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், இது 6 மணி 25 நிமிடம் டாக் டைம் வசதியினை அள்ளி வழங்கும். 174 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கும். இதனால் 2ஜி, 3ஜி போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தினாலும் அதற்கு இந்த பேட்டரி சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வேகா எல்டிஇ இஎக்ஸ் ஐஎம்-ஏ820-எல் ஸ்மார்ட்போன் , இந்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.30,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X