ரூ.15,000 விலையில் பேன்டெக் அறிமுகப்படுத்தும் ஆன்ட்ராய்டு போன்

Posted By: Staff
ரூ.15,000 விலையில் பேன்டெக் அறிமுகப்படுத்தும் ஆன்ட்ராய்டு போன்
ஸ்மார்ட்போன்களின் பட்டியலில், பேன்டெக் மொபைலையும் சேர்க்கலாம். இந்த மொபைல் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதற்கு கச்சிதமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஆசை யாரை விட்டது என்று பழமொழியே வந்துவிடும் போலிருக்கிறது. அந்த அளவு ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தின் மகிமை பரவியுள்ளது.

இந்த பேன்டெக் மொபைலின் மூலம், ஆன்ட்ராய்டு தொழில் நுட்ப வசதிகளை ஏராளமாக முடியும். ஏனென்றால் இதில் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

நிச்சயம் இந்த புதிய மொபைல் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கும். அதோடு 4.0 இஞ்ச் அகன்ற திரையை கொண்டுள்ளது.

இதில் அமோல்டு டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதால் 16 மில்லியன் கலர்களை சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 600 X 800 திரை துல்லியத்தை வழங்கும்.

5 மெகா பிக்ஸல் கேமராவினால் கண்ணுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும் புகைப்படத்தையும், வீடியோவினையும் வழங்கும். இனிமையான தருணங்களை இதன் மூலம் படம்பிடித்துக் கொள்ளலாம்.

600 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதி அளிக்கும் இந்த மொபைல்போனில் 32ஜிபி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் கறுப்பு நிறத்தில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் பயன்படுத்த முடியும்.

இந்த பேன்டெக் மொபைல் அதிக ஆற்றல் கொண்ட பேட்டரியை வழங்கும். அதோடு ஜிபிஎஸ், புளூடூத், வைபை, மீடியா ப்ளேயர் என்று ஏகப்பட்ட தொழில் நுட்ப வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு தேவைப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் உள்ளன. அதனால் இந்த மொபைலின் விலை ரூ.15,000 விலையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot